Wednesday , August 17 2022
Breaking News
Home / தமிழகம் / தமிழக முதல்வர் வெளிநாட்டு பயணம்
Vsolve UK

தமிழக முதல்வர் வெளிநாட்டு பயணம்

தமிழக முதல்வர் வெளிநாட்டு பயணம்
தமிழ்நாட்டிற்கு என்ன என்ன பலன்!!!
தமிழக முதல் அமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்று வெளிநாட்டு சுற்றுப்பயணம் 13 நாட்கள் மேற்கொண்டு உள்ளார்.இந்த பயணத்தில் இங்கிலாந்து ,அமெரிக்கா மற்றும் துபாய் நாடுகளுக்கு பயணம் செல்கிறார்.அவர் செல்லும் ஒவ்வொரு நாட்டுக்கும் ஒரு செயல்திட்டம் வகுக்கப்பட்டுள்ளது. முதலில் இங்கிலாந்து நாட்டில் மருத்துவ பணியாளர்களின் திறனை கண்டறிந்து அதை போல் தமிழகத்திலும் செயல்படுத்துவதற்கான ஒரு ஒப்பந்தத்தில் கையெழுத்து இடுகிறார்.அடுத்து தொழில் முனைவர்கள்,தொழில் அதிபர்களை சந்தித்து பேச இருக்கிறார் ,பின் பிரிட்டிஷ் நாடாளுமன்ற உறுப்பினர்களை சந்திக்கிறார்.அங்குள்ள கிங்ஸ் மருத்துவமனை இங்கு தமிழகத்திலும் துவங்குவதர்ககாக ஒப்பந்தத்தில் கையெழுத்து இடுகிறார்..கொசு வலைகள் ,அவசர ஆம்புலன்ஸ் இது போன்ற செயல்முறை அங்கு எப்படி உள்ளது.என்று பார்க்க இருக்கிறார் இங்கிலாந்தில் இவற்றை முடித்து கொண்டு அமெரிக்கா செல்லும் முதல்வர் அங்குள்ள முக்கிய நகரங்களில் உள்ள தொழில் அதிபர்கள் மற்றும் தொழில் முனைவர்களை சந்தித்து தமிகத்திலும் முதலீடு செய்வது குறித்து பேச இருக்கிறார்.ஏற்கனவே தமிழகத்தில் தொழில் செய்து கொண்டு இருக்கும் நிறுவங்களையும் அதன் முக்கிய தலைவர்களையும் சந்திக்கிறார் சான் பிரன்சிசில் லிங்கன் எலக்ட்ரிகலஸ் மற்றும் ஃபக்ஸ்கான் போன்ற நிறுவனங்களின் பிரதிநிதிகளை சந்ததித்து பேச இருக்கிறார் ,கலிபோர்னியாவில் உள்ள கால்நடை பண்ணைகளயும் அவர் பார்வையிடுவார் என சொல்லப்பட்டுள்ளது..இதற்கு பிறகு 8ம் தேதி இந்தியா திரும்பும் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி உலக மக்களை அதிக கவர்ந்து ஈர்க்கும் மற்றும் அதிகமான தமிழர்கள் வசிக்கும் பகுதியாக உள்ள துபாய்க்கு செல்கிறார்.துபாயில் சிறப்பு விருந்தினராக தொழில் முனைவர் கூட்டத்தில் சிறப்புரை ஆற்றுகிறார் தமிழக முதல்வர் அங்கு அவர்களை சந்தித்து தமிழகத்தில் முதலீடு செய்வதற்கு குறித்து ஆலோசனை செய்ய இருக்கிறார் முதல்வரின் 13 நாட்கள் சுற்றுப்பயணம் இதத்துடன் முடிகிறது..இந்தியாவில் தற்போது பொருளாதார மந்தநிலையில் இருக்கும் பொது தழில்க முதல்வரின் வெளிநாட்டு பயணம் பலரின் பார்வைக்கு எட்டியுள்ளது குறிப்பிடத்தக்கது..முதல்வரின் இந்த பயணம் வெற்றி அடைவதை பொறுத்து இருந்து தான் பார்க்க வேண்டும் .

 

 

முதல்வர் அவர்கள் தமிழகம் திரும்பும் போது தான் எவ்வளவு ஒப்பந்தம் கையெழுத்து ஆகியள்ளது மற்றும் தமிழகத்திற்கு முதலீடு எவ்வளவு என்பதும் தெரியவரும் .இதில் முக்கியமாக கவனிக்க வேண்டியது என்ன வென்றால் தமிழக முதலமைச்சர் ஒருவர் நீண்ட நாட்களுக்கு பிறகு தமிழக முதலிட்டுக்காக வெளிநாட்டு சுற்றுபயணம் மேற்கொள்வது என்பதுதான் .இதற்கு முன் தமிழக முதல்வராக இருந்த அண்ணாதுரை ,எம்ஜிஆர் ,கருணாநிதி ,சென்றுள்ளனர்.ஆனால் தமிழக முதலமைச்சர் ஆக இருந்த ஜெயலலிதா ஒரு முறை கூட இம்முறையான வெளிநாட்டு சுற்றுபயணம் மேற்கொண்டதில்லை .கடைசியாக கருணாநிதி 1996 முதல்வராக இருந்த போது சிங்கப்பூர் க்கு ஒரு சுற்றுபயணம் மேற்கொண்டார்.அது தான் கடைசியான தமிழக முதல்வரின் சுற்றுபயணம் அதற்கு பின் இப்போது தான் எடப்பாடி பழனிசாமி சுற்றுயணம் மேற்கொண்டுள்ளார்…நீண்ட இடைவெளிக்கு பின் வெளிநாட்டு சுற்றுபயணம் தமிழக முதல்வர் செல்வது இந்த பயணம் தான் இந்த பயணத்தின் வெற்றி எந்த அளவில் முடியும் என்பதையும் எவ்வளவு முதலீடு தமிழகத்தில் கிடைக்கும் என்பதையும் இங்கு வந்து சேரும் போது தான் தெரியவரும் பொறுத்து இருந்து தான் பார்க்க வேண்டும் தற்போது இந்தியாவில் பல்வேறு தலைவர்களின் பார்வை தமிழ்நாட்டு முதல்வரின் வெளிநாட்டு சுற்றுபயணத்தில் இருக்கிறது……

 

செய்தியாளர் ; நா.யாசர் அரபாத்

Bala Trust

About Admin

Check Also

வேடசந்தூர் அருகே கார் விபத்து…

திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் தாலுகாவைச் சேர்ந்த (கல்வார்பட்டி செக் போஸ்ட் அருகே) காசிபாளையம் அருகே நான்கு சக்கர வாகன விபத்து …

இரத்தம் வேண்டுமா?
NKBB TECHNOLOGIES