Saturday , August 13 2022
Breaking News
Home / தமிழகம் / தமிழ்நாடு மின்வாரிய ஒப்பந்த தொழிலர்கள் சங்கத்தின் இன்றைய பத்திரிகையாளர் சந்திப்பு நடைபெற்றது
Vsolve UK

தமிழ்நாடு மின்வாரிய ஒப்பந்த தொழிலர்கள் சங்கத்தின் இன்றைய பத்திரிகையாளர் சந்திப்பு நடைபெற்றது

தமிழ்நாடு மின்வாரிய ஒப்பந்த தொழிலாளர்கள் சங்கத்தினர் இன்று சென்னை சேப்பாக்கத்தில் உள்ள பத்திரிக்கையாளர் மன்றத்தில் பேட்டி அளித்தனர்.1997 ம் ஆண்டு முதல் தொடர்ந்து ஒப்பந்த தொழிலர்களாக பணிபுரிந்து வருகிறார்கள் ,இவர்களுக்கு முறையான ஊதியம் வழங்குவதில்லை ,மின்விபத்து ஏற்பட்டால் சரியான காப்பீட்டு வசதிகள் இல்லை பேரிடர் காலங்களில் பணிபுரியும் ஊழியர்களுக்கு தினக்கூலி ரூபாய் 380 வழங்கப்படும் என மின்துறை அமைச்சர் அறிவிப்பால் மின்வாரியம் தற்போது அனைத்து ஊழியர்களின் உழைப்பை சுரண்டி கொண்டு இருப்பதாகவும் வெளிமாநிலத்தவர்களை பணியில் நோக்கத்தோடு தற்போது செயல்படுவதாகவும் ,அதற்கான கேங்மென் என்ற பணி ஒத்துக்கப்பட்டுள்ளதாகவும் கூறினார்கள். இதனால் ஒப்பந்த தொழிலர்களின் வாழ்க்கை மிகவும் கேள்வி குறியாக இருப்பதாகவும் கூறினார்கள் மற்றும் தமிழக அரசும் ,மின்சார வாரியமும் புயல் காலங்களில் சிறப்பாக பணியாற்றி தொழிலர்களுக்கு நன்றி கூட தெரிவிப்பது இல்லை என புகார் கூறுகின்றனர்..அவர்களது மனகுமறல் பதில் அளிக்க வேண்டும் எனவும் அடுத்த கட்ட போரட்டங்களை அறிவிப்போம் என்று மின் வாரிய ஒப்பந்த தொழிர்களின் மாநில தலைவர் முத்துபாண்டி மற்றும் மாநில பொது செயலாளர் ராஜா ராஜேந்திரன் மாநில துணை செயலாளர் சுப்பிரமணி ஆகியோர் தெரிவித்தனர்…..
செய்தி ; நா.யாசர் அரபாத்

Bala Trust

About Admin

Check Also

வேடசந்தூர் அருகே கார் விபத்து…

திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் தாலுகாவைச் சேர்ந்த (கல்வார்பட்டி செக் போஸ்ட் அருகே) காசிபாளையம் அருகே நான்கு சக்கர வாகன விபத்து …

இரத்தம் வேண்டுமா?
NKBB TECHNOLOGIES