சேலம் மாவட்டம் அரசு தலைமை மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் நேற்று இலவச இரத்த தான முகாம் நடைபெற்றது. இதில் சேலம் மாவட்ட தலைவர் திரு. கார்த்திகேயன், சேலம் மாவட்ட செயலாளர் திரு.மணிகண்டன், சேலம் மாவட்ட RTE & RTI செயலாளரும் மற்றும் சட்டமன்ற வடக்கு தொகுதி தலைவருமான திரு. குமரவேல், மாவட்ட பொருளாளர் திரு. ஹரிஹரன் மற்றும் பல நிர்வாகிகள் கலந்து கொண்டனர். மேலும் பொது மக்களும் ஆர்வமுடன் கலந்து கொண்டு இரத்த தானம் செய்தனர். இதில், இரத்த தானம் செய்தவர்களுக்கு சான்றிதழ்களும், பரிசுகளும் வழங்கபட்டது.
