Sunday , December 3 2023
Breaking News
Home / கரூர் / டிடிவி விஜயவிநாயகம் அவர்களை நேரில் சந்தித்து குளித்தலை பகுதி மக்கள் தேவைகளையும் மற்றும் எதிர்கால நகர் மற்றும் ஒன்றியத்தின் வளர்ச்சி குறித்தும் குளித்தலை பகுதி மாணவர்கள் இளைஞர்கள் மற்றும் பொதுமக்கள் கூட்டமைப்பு  சார்பாக ஆலோசனை
MyHoster

டிடிவி விஜயவிநாயகம் அவர்களை நேரில் சந்தித்து குளித்தலை பகுதி மக்கள் தேவைகளையும் மற்றும் எதிர்கால நகர் மற்றும் ஒன்றியத்தின் வளர்ச்சி குறித்தும் குளித்தலை பகுதி மாணவர்கள் இளைஞர்கள் மற்றும் பொதுமக்கள் கூட்டமைப்பு  சார்பாக ஆலோசனை

குளித்தலை பகுதி மக்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி ஒன்றிய பெருந்தலைவர் டிடிவி விஜயவிநாயகம் அவர்களை நேரில் சந்தித்து குளித்தலை பகுதி மக்கள் தேவைகளையும் மற்றும் எதிர்கால நகர் மற்றும் ஒன்றியத்தின் வளர்ச்சி குறித்தும் குளித்தலை பகுதி மாணவர்கள் இளைஞர்கள் மற்றும் பொதுமக்கள் கூட்டமைப்பு  சார்பாக ஆலோசிக்கப்பட்டது …

இக்கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டு விவரங்கள்

நகராட்சியாக தரம் உயர்ந்து 25 ஆண்டுகள் ஆகியும் குளித்தலை நகராட்சியில் பேருந்து நிலையம் அமைக்கப்படவில்லை எனவே

குளித்தலை மக்களின்   25 ஆண்டுகால கோரிக்கையான பேருந்து நிலையம் அமைக்கவும்.

தற்போது திருச்சியில் இருந்து சுங்க கேட் இறங்கினால் லாலாப்பேட்டை டிக்கெட் எனவும் கரூரிலிருந்து பெரிய பாலம் இறங்கினால் பெட்டவாய்த்தலை டிக்கெட்  வசூல் செய்யப்படுகிறது..

திருச்சி மற்றும் கரூர் ஈரோடு திருப்பூர் கோவை நகரங்களில் இருந்து வரும் பேருந்துகளில் சுங்க கேட் பேருந்து நிலையம் பெரிய பாலம்

ஒரே கட்டணம்

வசூலிக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும்..

குளித்தலை நகரத்திற்கு மற்றும்தேவையான அனைத்து அரசு நலத் திட்டங்களையும் செயல்படுத்தவும் மற்றும் அனைத்து அரசு அலுவலகங்களும் சொந்த கட்டிடத்திற்கு மாற்றவும் குளித்தலையில் விளையாட்டு மைதானம் துணை மின் நிலையம் தீயணைப்பு நிலையம் மற்றும் நமது மாவட்ட மதிப்பிற்குரிய போக்குவரத்துறை அமைச்சர் MR.விஜயபாஸ்கர் துறைசார்ந்த கோரிக்கைகளும் ஆலோசிக்கப்பட்டது .இதில் குளித்தலை பகுதியில் இருந்து அதிக அளவில் பேருந்துகள் இயக்கவும் மற்றும் மதுரைக்கு கூடுதல் பேருந்து இயக்கவும் குளித்தலையில் இருந்து மாயனூர் புதிய பாலம் வழியாக காட்டுப்புத்தூர் மற்றும் நாமக்கல்லுக்கு புதிய பேருந்துகள் இயக்கவும் மற்றும் இரவு நேரத்தில் சேலத்திலிருந்து முசிறி வழியாக திருச்சி செல்லும் பேருந்துகள் குளித்தலை வழியாக திருச்சி க்கு சில பேருந்துகளை இயக்கவும் அதேபோல் இரவு நேரத்தில் திருச்சியிலிருந்து சேலம் செல்லும் பேருந்துகள் குளித்தலை வழியாக சென்று சேலம் இயக்கவும் அரசு பரிசீலிக்க வேண்டும் எனவும் வலியுறுத்தப்பட்டது…

மேலும் குளித்தலை பெரிய பாலத்தில் அனைத்து அரசு பேருந்துகளும் நின்று செல்லும் உத்தரவு வழங்கிய தமிழக அரசுக்கு மற்றும் போக்குவரத்துறை அமைச்சர் அவர்களுக்கும் நன்றி தெரிவித்து நகர மக்கள் இயக்கம் மதிப்புக்குரிய பெல் சீதாராமன் அவர்கள் நோட்டீஸ் வழங்கினர்…

இக்கூட்டத்தில் குளித்தலை பகுதி இளைஞர்கள் மாணவர்கள் பொதுமக்கள் கூட்டமைப்பு மற்றும் சமூக ஆர்வலர்கள் கலந்து கொண்டனர்.

Bala Trust

About Admin

Check Also

இணைந்து எழு கரூர் கூட்டம்…

25/11/2023 இன்று கரூரில் நடைபெற்ற இணைந்து எழு கரூர் என்ற குழு கூட்டத்தில் எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலில் கரூர் நாடாளுமன்ற …

இரத்தம் வேண்டுமா?
NKBB TECHNOLOGIES