Tuesday , November 28 2023
Breaking News
Home / தமிழகம் / குளித்தலையில் அரசு பேருந்தை சிறைப்பிடித்த இளைஞர்கள்
MyHoster

குளித்தலையில் அரசு பேருந்தை சிறைப்பிடித்த இளைஞர்கள்

திருச்சியில் அரசு மருத்துவமனைக்கு சென்று விட்டு திருச்சி ஐயப்பன் கோயில் அருகில் திருப்பூர் பஸ்ஸில் வயதானவர்கள் மற்றும் குழந்தைகளுடன் ஏற முயன்ற குளித்தலை சேர்ந்தவர்களை ஏற்ற மறுத்து உதாசீனப்படுத்திவிட்டு குளித்தலைக்கு செல்லாது என்று சொல்லிவிட்டு குளித்தலை நகரத்திற்குள் நான்கு முப்பது மணி அளவில் அந்தப் பேருந்தை குளித்தலை சமூக ஆர்வலர்கள் மற்றும் அனைத்துக் கட்சி நண்பர்கள் சிறைப்பிடித்தனர் நடத்துனர் அவர்கள் உண்மையை ஒப்புக்கொண்டு தவறுதான் இனி தவறு செய்யமாட்டேன் என்று கூறிய காட்சிகளை காணுங்கள்…
மேலும் திருப்பூர் பஸ் நடத்துனர் அவர்களுக்கு மெமோ வழங்கப்பட்டு திருப்பூர் கிளை மேலாளர் அவர்களுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது குளித்தலை ஆர்டிஓ அவர்களுக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது காவல்துறையினர் சமாதானப்படுத்தி சமூக ஆர்வலர்களை அனைத்துக்கட்சி நண்பர்களே அனுப்பிவைத்தனர் …
பின்பு பேருந்து திருப்பூர் சென்றது… 31/October/2019
மாலை நான்கு முப்பது மணி அளவில்..
குளித்தலை பேருந்து நிலையத்தில் …
உங்கள் உரிமைகளை நீங்கள் கேட்காத வரை உங்களுக்கான உரிமைகள் கிடைக்காது என்று குரல் கொடுத்தார்கள்.

Bala Trust

About Admin

Check Also

இணைந்து எழு கரூர் கூட்டம்…

25/11/2023 இன்று கரூரில் நடைபெற்ற இணைந்து எழு கரூர் என்ற குழு கூட்டத்தில் எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலில் கரூர் நாடாளுமன்ற …

இரத்தம் வேண்டுமா?
NKBB TECHNOLOGIES