அமைச்சர் ராஜேந்திர பாலாஜியை கண்டித்து #SDPI_கட்சி மதுரை மாவட்டம் சார்பாக கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
காஷ்மீரை போன்று தமிழக முஸ்லிம்களை ஒதுக்கி வைக்கும் சூழல் உருவாகும் என்ற அமைச்சர் ராஜேந்திர பாலாஜியின் பேச்சை கண்டித்து மதுரை மாவட்டம் #SDPI கட்சி சார்பாக மதுரை தெற்குவாசல் சின்னக்கடை வீதியில் இன்று(18-10-2019) மதியம் 1:45 மணி அளவில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் மதுரை மாவட்ட தலைவர் A.முஜிபுர் ரஹ்மான் தலைமையில் நடைபெற்றது.
SDPI கட்சியின் மதுரை மாவட்ட துணை தலைவர் சீமான் சிக்கந்தர் வரவேற்புரை நிகழ்த்தினார்.
இந்த கண்டன ஆர்ப்பாட்டத்தில் கட்சியின் மதுரை மாவட்ட நிர்வாகிகள் முன்னிலை வகித்தனர்.
இதில் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்ட பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் மதுரை மாவட்ட தலைவர் இத்ரீஸ் அகமது மற்றும் SDPI கட்சியின் மதுரை மாவட்ட தலைவர் A.முஜிபுர் ரஹ்மான் ஆகியோர் கண்டன உரை நிகழ்த்தினார்.
இந்த கண்டன ஆர்ப்பாட்டத்தில் கட்சியின் நிர்வாகிகள் செயல்வீரர்கள் ஆதரவாளர்கள் பொதுமக்கள் என 200க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டு கண்டனங்களை தெரிவித்தனர்.
இறுதியாக மத்திய தொகுதி செயலாளர் டாக்டர் இப்ராஹிம் நன்றியுரை கூறினார்.
செய்தி: யாசர்