நாங்குநேரி சட்டமன்ற தொகுதி களக்காடு பேரூராட்சி பகுதியில் மாண்புமிகு மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் டாக்டர்.சி. விஜயபாஸ்கர் அவர்கள் வாக்கு சேகரிக்க வியாசராசபுரத்தில் வீதி வீதியாக சென்ற பொழுது, ஏழை குடும்பத்தை சார்ந்த வெனிஷா என்ற பெண்மணி ஒருவர்
அமைச்சர் அவர்களிடம் *நீங்கள் எங்கள் வீட்டில் எல்லாம் சாப்பிடுவீர்களா?, என்று கேட்டதற்கு அமைச்சர் அவர்கள் சற்றும் தாமதிக்காமல் உடனடியாக அவரது இல்லத்திற்கு நேரில் சென்று மிக மிக எளிமையாக தரையில் அமர்ந்து உணவு சாப்பிட்டு அந்த குடும்பத்தையே வியப்பில் ஆழ்த்தினார். அமைச்சர் அவர்களின் இந்த செயலை கண்டு தெருவில் உள்ள அனைத்து மக்களும் மகிழ்ச்சி அடைந்தனர்.
