Tuesday , November 28 2023
Breaking News
Home / சினிமா / தளபதி 64க்கு ஓகே சொன்ன மாளவிகா மோகனன்.
MyHoster

தளபதி 64க்கு ஓகே சொன்ன மாளவிகா மோகனன்.

சென்னை: நடிகர் விஜய் நடக்கும் தளபதி 64 படத்தில் புதிய வரவாக மாளவிகா மோகனன் இணைந்துள்ளார். இதற்கான அதிகாரபூர்வ அறிவிப்பு தற்போது வெளியாகி உள்ளது. பிகில் படத்தின் பரபரப்பை கொஞ்சம் கொஞ்சமாக தளபதி 64 விழுங்கி கொண்டு இருக்கிறது என்றுதான் கூற வேண்டும். ஆம், பிகில் படம் குறித்த எதிர்பார்ப்பை விட, தளபதி 64 படத்திற்குத்தான் எதிர்பார்ப்பு அதிகமாகி வருகிறது. தளபதி 64 படம் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில், விஜய் நடிப்பில் வெளியாக உள்ளது. அடுத்த வருடம் மே மாதம் இந்த படம் வெளியாகும். சென்னையில் நடக்கும் கதை இது என்று குறிப்பிடுகிறார்கள்.

யார் எல்லாம் கடந்த வாரம் இந்த படத்தின் வில்லனாக விஜய் சேதுபதி அறிவிக்கப்பட்டார். இதற்கான அறிவிப்பை தொடர்ந்து தினமும் இந்த படத்தில் நடிக்கும் கதாபாத்திரங்கள் குறித்த விவரம் வெளியாகும் என்று கூறப்பட்டது. அதன்படி விஜய் சேதுபதி இந்த படத்தின் வில்லன் என்று அறிவிக்கப்பட்டது. அடுத்து யார் அதன்பின் மலையாள நடிகர் ஆண்டனி வர்கீஸ் இந்த படத்தில் இன்னொரு வில்லனாக வருவார் என்றும் அறிவிப்பு வெளியானது. இதையடுத்து நேற்று மதியம் இந்த படத்தில் நடிகர் சாந்தனு இணைந்துள்ளார் என்றும் அறிவிப்பு வெளியானது. இதனால் ரசிகர்கள் இந்த படத்தை எதிர்பார்க்க தொடங்கி உள்ளனர்.

வேறு யார் இதேபோல் தற்போது தளபதி 64 படத்தில் புதிய வரவாக மாளவிகா மோகனன் இணைந்துள்ளார். இதற்கான அதிகாரபூர்வ அறிவிப்பு தற்போது வெளியாகி உள்ளது. பல நாட்களாக கிசுகிசுக்கப்பட்ட இந்த விஷயம் அதிகாரபூர்வமாக வெளியாகி உள்ளது.

யார் இவர், கேரளாவை சேர்ந்த மாளவிகா மோகனன் மலையாளத்தில் நிறைய படங்களில் நடித்துள்ளார். இவர் நடித்த பட்டம் போலே படம் அங்கு பெரிய ஹிட் அடித்தது. பேட்ட படத்தில் சசிகுமார் மனைவியாக இவர் நடித்தார். அந்த படத்தில் இவரின் பாத்திரம் பேசப்பட்டது.
வைரல் இன்ஸ்ட்டா இவரின் இன்ஸ்டா புகைப்படங்கள் பெரிய அளவில் வைரலாகி வந்தது. இவர் நிறைய கவர்ச்சியான புகைப்படங்களை சமீப நாட்களாக வெளியிட்டு வந்தார்.

இதனால் தமிழில் திடீர் என்று இவர் பெரிய அளவில் வைரலானார் என்பது குறிப்பிடத்தக்கது.
என்ன ஜோடி இந்த படத்தில் விஜய்க்கு ஜோடியாக இவர் நடிக்கிறார். படத்தில் இவரின் ரோல் வெறும் ஹீரோயினாக மட்டும் இல்லாமல் முக்கிய திருப்பத்தை ஏற்படுத்துமாம். அதனால் உடனே படத்தில் நடிக்க இவர் ஒப்புக்கொண்டார் என்று கூறுகிறார்கள்.

Bala Trust

About Admin

Check Also

இணைந்து எழு கரூர் கூட்டம்…

25/11/2023 இன்று கரூரில் நடைபெற்ற இணைந்து எழு கரூர் என்ற குழு கூட்டத்தில் எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலில் கரூர் நாடாளுமன்ற …

இரத்தம் வேண்டுமா?
NKBB TECHNOLOGIES