கரூர் அருகே மருதூர் பேரூராட்சி சார்பில் மரக்கன்று நடப்பட்டது
கரூர் மாவட்டம் குளித்தலை அருகே மருதூர் முதல்நிலை பேரூராட்சிக்குட்பட்ட பகுதிகளில் தமிழக அரசின் ஆணைப்படி ஜல்சக்தி அபியான் திட்டத்தின்கீழ் நீர் மேலாண்மையை மேம்படுத்தும் வகையில் பணிக்கம்பட்டி முதல் நடுப்பட்டி வரையிலான வாய்க்காலின் கரையோரங்களில் மரக்கன்றுகள் மட்டும் பனை விதைகள் நடும் நிகழ்ச்சி மருதூர் பேரூராட்சி செயல் அலுவலர் ஹரிராமமூர்த்தி தலைமையில் நடைபெற்றது. இதில் சத்தியமங்கலம் துரைசாமி நினைவு ஐ.டி.ஐ கல்லூரி மாணவர்களும் கலந்து கொண்டு கட்டளை மேட்டு வாய்க்காலின் கரையோரங்களில் ஓரங்களில் 100 மரக்கன்றுகள் மற்றும் 1000 பனை விதைகள் விதைத்தனர். இதில் சிறப்பம்சம் என்னவென்றால் மரக்கன்றுகள் அனைத்திற்கும் மருதூர் பேரூராட்சி வளம் மீட்பு பூங்காவில் தயாரிக்கப்பட்ட இயற்கை மண்புழு உரம் இடப்பட்டது. இந்தப் பணியில் பேரூராட்சி நிர்வாக ஊழியர்கள், துப்புரவு பணியாளர்கள் அனைவரும் ஈடுபட்டனர்.
