மீனவர் படகு மாயம் !!!
Admin
September 6, 2019
தமிழகம்
182 Views
User Rating:
Be the first one !

ராமேஸ்வரம்: மல்லிப்பட்டினம் கடற்கரையில் ராமேஸ்வரத்தை சேர்ந்த மீனவர்கள் சென்ற படகு நடுக்கடலில் மூழ்கியதில் 8 மீனவர்கள் மாயமாகினர். இதனால் அப்பகுதியில் சோகம் நிலவி வருகிறது.
ராமேஸ்வரத்தைச் சேர்ந்த மீனவர்கள் 10 பேர் கடலூரில் இருந்து மீன் பிடிப்படகு வாங்கி கொண்டு சொந்த ஊருக்கு திரும்பி கொண்டிருந்தனர். அப்போது மல்லிப்பட்டினம் அருகே படகு கடலில் கவிழ்ந்தது.
இந்த விபத்தில் 10 பேரும் தண்ணீரில் மூழ்கினர். இதில் செந்தில், காளீஸ்வரன் ஆகிய இருவர் உயிர் தப்பி ராமேஸ்வரம் வந்தனர். நேராக மீன்வளத்துறை அதிகாரிகளிடம் சென்று நடந்தவற்றை கூறியதோடு 8 பேர் மாயமான செய்தியையும் கூறினர்.
இதையடுத்து 8 பேரையும் தேடும் பணிகள் துரிதப்படுத்தப்பட்டுள்ளன.
இதனால் ராமேஸ்வரத்தில் சோகம் நிலவியுள்ளது. தகவலறிந்த மற்ற மீனவர்களும் 8 மீனவர்களின் உறவினர்களும் கரையில் நின்று கொண்டு அழுது கொண்டிருக்கின்றனர்.