கரூர் மாவட்டத்தில் உள்ள ஜெயராம்ஸ் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் தமிழ் கலை இலக்கிய அறக்கட்டளை துவங்கப்பட்டது.அறக்கட்டளை துவக்க விழா மற்றும் விருது வழங்கும் விழா அறக்கட்டளை நிர்வன தலைவர் வழக்கறிஞர் சதீஷ் தலைமையில் பல்வேறு நிகழ்ச்சிகள் ஏற்பாடு செய்யப்பட்டது.இதில் பட்டிமன்றம், பர இசை ,சிலம்பம் ,கிராமிய நடனம் நடைபெற்றது..இதில் 50 பேருக்கு சாதனையாளர் விருது வழங்கப்பட்டது.ஜெயராமஸ் கல்லூரியின் தாளர் ஆர்.ராமசாமி அறக்கட்டளை துவங்கி வைத்தார்.உடன் திருச்சி டாக்டர் ராமசந்திரன் ,கல்லூரி முதல்வர் முனைவர் தங்கவேல் ,தமிழ்த்துறை முனைவர் கார்த்திக் ஆகியோர் கலந்து கொண்டனர் .சிறப்பு விருந்தினராக கவி செல்வா (எ)செல்வாரணி அவர்கள் கலந்து கொண்டார் .சுமார் 500 க்கு மேற்பட்ட பார்வையாளர்கள் நிகழ்ச்சி யில் கலந்து கொண்டார்கள்
செய்தி ; நா.யாசர் அரபாத்