#மக்களைத்தேடி_மாவட்ட_நிர்வாகம் என்ற உன்னத நோக்கத்தில் அனைத்து தரப்பு மக்களின் கோரிக்கைகளையும் நிறைவேற்ற வேண்டும் என்ற உரிய நோக்கத்தில் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களால் 19.08.2019 அன்று சேலம் மாவட்டத்தில் ‘மாண்புமிகு தமிழ்நாடு #முதலமைச்சரின் #சிறப்பு_குறை_தீர்க்கும்_திட் டம் தொடங்கிவைக்கப்பட்டது.

மேலும், தமிழகத்தின் அனைத்துப் பகுதிகளிலும் இத்திட்டம் தொடர்ந்து நடைமுறைப்படுத்தப்படும் என்று மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் உத்தரவிட்டுள்ளார்கள்.
அதனடிப்படையில், கரூர் மாவட்டத்தில் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சரின் சிறப்பு குறை தீர்க்கும் திட்டத்தின் கீழ் நடைபெற்ற நிகழச்சிகளில், கரூர் நகராட்சி 1,2,3,4,5 வார்டு மற்றும் மண்மங்கலம் வட்டம் கோயம்பள்ளியில் பொதுமக்களிடம் கோரிக்கை மனுக்களை மாண்புமிகு போக்குவரத்துத்துறை அமைச்சர் திரு.#எம்ஆர்_விஜயபாஸ்கர் அவர்கள், மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.த.அன்பழகன் அவர்கள் தலைமையில் பொதுமக்களை நேரில் சந்தித்து மனுக்களைப் பெற்றுக்கொண்டார்.
அவ்வாறு பெறப்படும் மனுக்கள் அனைத்தும் அன்றையதினமே, இத்திட்டத்திற்கென்று பிரத்யேகமாக தயாரிக்கப்பட்டுள்ள மனுக்களை ஆன்லைனில் பதிவு செய்யும் முறையில் பதிவுசெய்து, சம்மந்தப்பட்ட துறை அலுவலர்களுக்கு அனுப்பி வைக்கப்படும்.

இந்த மனுக்களின் மீது உரிய விசாரணை செய்து, தகுதிவாய்ந்த நபர்களுக்கு அவர்களின் கோரிக்கைகளை ஒரு மாத காலத்திற்குள் நிறைவேற்றித்தரும் வகையில், சம்மந்தப்பட்ட துறையின் அலுவலர்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் உத்தரவிட்டுள்ளார்கள்.
விதிகளுக்குட்பட்டு அரசின் உதவிகளை பெற தகுதிவாய்ந்த நபர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு அனைவருக்கும் உரிய நலத்திட்ட உதவிகள் செப்டம்பர் மாதம் வழங்கப்படவுள்ளது.
எனவே, பொதுமக்கள் இந்த சிறப்பான வாய்ப்பை பயன்படுத்திக்கொண்டு தங்களுக்கு தேவையான அடிப்படை வசதிகளான குடிநீர், சாலை, தெருவிளக்கு போன்ற தேவைகளுக்கும், முதியோர் உதவித்தொகை, விதவை உதவித்தொகை, மாற்றுத்திறனாளிகள் உதவித்தொகை, கல்வி உதவித்தொகை உள்ளிட்ட உதவித்தொகைகள் தேவைப்படுவோர்,
மேலும் பொதுமக்கள் நலன் சார்ந்த கோரிக்கை மனுக்களை உங்கள் பகுதிகளுக்கு மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் சிறப்பு குறைதீர்க்கும் திட்டத்தின் கீழ் மனுக்கள் பெற வரும் அரசுத்துறை அலுவலர்களிடம் வழங்கி பயன்பெறவேண்டும். இவ்வாறு தெரிவித்தார்.


இந்நிகழ்ச்சியில் கிருஷ்ணராயபுரம் சட்டமன்ற உறுப்பினர் திருமதி.ம.கீதா, திருச்சிராப்பள்ளி மத்திய கூட்டுறவு வங்கித்தலைவர் திரு.ஏ.ஆர்.காளியப்பன், கரூர் நகர கூட்டுறவு வங்கித்தலைவர் திரு.திருவிகா, மொத்த கூட்டுறவு விற்பனை பண்டகசாலை தலைவர் திரு.நெடுஞ்செலியன், தளவாபாளையம் கூட்டுறவு வங்கித்தலைவர் திருமதி.ரேணுகா, கரூர் நகராட்சி ஆணையர்(பொ) திரு.இராஜேந்திரன், கரூர் வருவாய் கோட்டாச்சியர் திருமதி.சந்தியா,சமுக பாதுகாப்பு திட்ட துணை ஆட்சியர் திரு.சரவணமூர்த்தி, மண்மங்கலம் வட்டாச்சியர் திரு.இரவிக்குமார். முன்னால் சட்டமன்ற உறுப்பினர் திரு.காமராஜ்,கூட்டுறவு சங்கபிரதிநிதிகள் திரு.கமலக்கண்ணன், திரு.வி.சி.கே.ஜெயராஜ், தமிழ்நாடு திரு.செல்வராஜ், திருமதி.மல்லிகா உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.



