Tuesday , November 28 2023
Breaking News
Home / ஆன்மீகம் / சனிப்பெயர்ச்சி 2020 -2023 : ராஜயோகம் அனுபவிக்கப் போகும் ராசிக்காரர்கள் யார் தெரியுமா
MyHoster

சனிப்பெயர்ச்சி 2020 -2023 : ராஜயோகம் அனுபவிக்கப் போகும் ராசிக்காரர்கள் யார் தெரியுமா

சென்னை: சனிபகவான் நீதிமான். அவர் கொடுக்க வேண்டும் என்று நினைத்தால் அள்ளிக்கொடுப்பார். 12 ராசிகளையும் கடக்க சனி பகவான் 30 ஆண்டுகாலம் எடுத்துக்கொள்வார். இதில் ஏழரை ஆண்டுகாலம் பிடித்து ஆட்டி வைப்பார். விரையசனி, ஜென்மசனி, பாதசனி என படிப்பினைகள் கொடுப்பார். அர்தாஷ்டம சனி, கண்டச்சனி, அஷ்டம சனி, என மொத்தம் 15 ஆண்டுகள் கஷ்டப்பட்டாலும் சனி பகவான் ஒருவரின் ராசிக்கு 3,5,6,9,10,11 ஆகிய இடங்களில் சஞ்சரிக்கும் கால கட்டத்தில் சங்கடங்கள் இல்லாத சந்தோஷங்களைத் தருவார். நிகழவிருக்கும் சனிப்பெயர்ச்சியால் ராஜயோகம் அனுபவிக்கப் போகும் ராசிகாரர்கள் யார் யார் என்று பார்க்கலாம்
விகாரி வருடம் தை மாதம் 10ஆம் தேதி 2020ஆம் ஆண்டு ஜனவரி 24ஆம் தேதி சனி பகவான் தனுசு ராசியில் இருந்து மகரம் ராசிக்கு நகர்கிறார். சனிபகவானின் பார்வை 3,7,10ஆம் இடங்களின் மீது விழுகிறது. தனுசு ராசியில் இருந்து சனி பகவான் மூன்றாம் பார்வையாக மீனம் ராசியையும், ஏழாம் பார்வையாக கடகம் ராசியையும், 10ஆம் பார்வையாக துலாம் ராசியையும் பார்வையிடுகிறார்.

 

 

சனிபகவான் தனுசு ராசியில் இருந்து மகரம் ராசியான தனது சொந்த வீட்டிற்குச் செல்கிறார். சனியின் சஞ்சாரம், பார்வையால் இன்னும் இரண்டரை ஆண்டுகளுக்கு மேஷம், ரிஷபம், சிம்மம், விருச்சிகம், மீனம் ஆகிய ராசிக்காரர்கள் அதிக பலன்களையும், லாபங்களையும், வளர்ச்சியும் ராஜயோகத்தையும் பெறப்போகின்றனர். இந்த ஐந்து ராசிக்காரர்கள் தவிர மற்ற 7 ராசிக்காரர்களுக்கு பாதிப்பா என்று நினைக்க வேண்டாம். சனிபகவான் படிப்பினைகளை கொடுத்து அதற்குப் பிறகு நல்ல பலன்களைக் கொடுப்பார்

சசயோகம்

சனி பகவான் மேஷம் ராசிக்கு பத்தாம் வீடான தொழில் ஸ்தானத்தில் அமரப்போவதால் செய்யும் தொழில் வளர்ச்சியடையும். அதிக பணவரவும் லாபமும் கிடைக்கும். பாவ கிரகங்கள் கேந்திரத்தில் இருந்தால் முழு பலம் பெறும். அதுவும் ஆட்சி பெற்ற சனியால் சச யோகம் செயல்படும். தர்ம கர்மாதி யோகம் செயல்படும். சனி, துலாம், மகரம் மற்றும் கும்பம் ஆகிய வீடுகளில் அமர்ந்துள்ள நிலையில், அந்த வீடுகள் லக்னம் அல்லது ராசி ஆகியவற்றுக்கு 1,4,7,10 என்ற கேந்திர ஸ்தானங்களாக அமைந்திருந்தால் இந்த யோகம் ஏற்படுகிறது.

பணவருமானம் கொட்டும்

மேஷம் ராசிக்காரர்களுக்கு இன்னும் சில மாதங்களில் குரு ஒன்பதாம் வீட்டில் ஆட்சி பெற்று அமரப்போகிறார். அதே போல பத்தாம் வீட்டில் சனி மகரமான தனது வீட்டில் ஆட்சி பெற்று அமரப்போகிறார். இது ஒன்பதில் ஒன்பதாம் அதிபதி, பத்தில் பத்தாம் அதிபதி என யோகமான காலகட்டமாகும்.

கடந்த பல வருடங்களாக பட்ட கஷ்டங்களுக்கு பலன்கள் தேடி வரப்போகிறது. விடியா மூஞ்சி வேலைக்கு போனாலும் கூலி கெடைக்காது என்பார்கள் அதுபோல அஷ்டம குருவால் ஏகப்பட்ட கஷ்டங்களை பட்டிருப்பீர்கள். இனி கஷ்டங்கள் தீரப்போகிறது.

Bala Trust

About Admin

Check Also

திருவண்ணாமலையில் சத்குரு தவபலேஸ்வரர் குருபூஜை விழா

கடந்த 20.12.21 திங்கட்கிழமை திருவண்ணாமலையில் ‘கரூர் ஸ்ரீ நந்தீஸ்வரர் ஞானபீடம்’ நடத்தியசத்குரு சுவாமி ஸ்ரீலஸ்ரீ தவபாலேஸ்வரர் குரு பூஜை நடைபெற்றது. …

இரத்தம் வேண்டுமா?
NKBB TECHNOLOGIES