மதுரை உலக தமிழ் சங்கத்தில் நேற்று காலை தகவல் அறியும் உரிமை திருவிழா மக்கள் விழிப்புணர்வு அறக்கட்டளை சார்பில் நடைபெற்றது. விழாவிற்க்கு மக்கள் விழிப்புணர்வு அறக்கட்டளையின் நிறுவனர் திரு.ஹக்கீம் தலைமை தாங்கினார். திரு. பாண்டியராஜன் வாழ்த்துரை வழங்கினார். விழாவில் தகவல் அறியும் உரிமை சட்டம் பற்றிய பயிற்சி வகுப்பு நடத்தப்பட்டது. பயிற்ச்சியில் பங்குபெற்றவர்கள் தகவல் அறியும் உரிமை சட்டத்தில் மனு எழுதுவதை திருச்சியை சேர்ந்த திரு.ஆரோன். K.திரவியராஜ் துவங்கிவைத்தார். அரசு இனைய சேவைகள் பற்றிய தொகுப்பினை திருநெல்வேலி யை சேர்ந்த திரு.ஞா.ஜான்சன் விளக்கினார். தகவல் அறியும் உரிமை சட்டத்தின் அனுபவத்தினை பற்றி கோவை.S.P.தியாகராஜன், பாம்பன் சிறுத்தை M.முத்துவாப்பா, உதிரத்துளிகள் மக்கள் சேவை மையம் நிறுவனர் திரு.S.அசாருதீன், ஆரணி K.இப்ராஹிம் ஆகியோர் எடுத்துரைத்தனர்.விழாவில் திரு. மணிகண்டன் – நிறுவனர் வழிகாட்டி மனிதர்கள்.
திரு.அபூபக்கர் – நிறுவனர் நீர் நிலைகள் பாதுகாப்பு
திரு.ராஜன் – வைகை நதி மக்கள் இயக்கம்
திரு.செல்லக்கன்னு – தலைவர் தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னனி
திரு.N.சின்னமாயன் -தலைவர் எ.ஜி.ஆர். சென்றல் மார்க்கெட் அனைத்து வியாபாரிகள் கூட்டமைப்பு.
திரு.செல்வராஜ் – தலைவர் கொட்டாம்பட்டி ஒன்றிய பெரியார் பாசன நீட்டிப்பு குழு
திரு.அப்துல் காதர் -முன்னால் மண்டல தலைவர் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக பங்கேற்றனர். நன்றியுரை திரு.K.சதாம் உசேன் நிகழ்த்தினார். விழாவிற்க்கு தமிழ்நாட்டின் பல பகுதிகளில் இருந்து சுமார் 350க்கும் மேற்ப்பட்டவர்கள் பங்கேற்றனர்.
தமிழ்நாடு இளைஞர் கட்சியின் சார்பாக கலந்து கொண்டவர்கள், திரு பாலமுருகன் மாநில தலைவர், IT WING, லோகேஷ் கரூர் நகர செயலாளர், திருச்சி மாவட்டம் மண்ணச்சநல்லூர் வருங்கால தமிழ்நாடு இளைஞர் கட்சியின் வேட்பாளர் திரு ரங்கராஜ் மற்றும் திருச்சி மாவட்ட உறுப்பினர்கள் கதிர்வேல் & வரதராஜன் ஆகியோர் கலந்து கொண்டனர்.