மதுரை மாவட்டம் கப்பலூர் தொழிற்பேட்டையில் உள்ள அரவிந்த் செட்டிநாடு ஸ்நாக்ஸ் கம்பெனியில் ஆயுத பூஜை விழா சிறப்பாக நடைபெற்றது. இவ்விழாவில் கம்பெனியின் உரிமையாளர் தென்னப்பன் மற்றும் ஊழியர்கள் திரளாக கலந்து கொண்டனர். இது குறித்து உரிமையாளர் தென்னப்பன் கூறுகையில் அரவிந்த் செட்டிநாடு ஸ்நாக்ஸ் கம்பெனியில் ஆயுத பூஜையை ஊழியர்களுடன் சிறப்பாக கொண்டாடினோம். இந்த கம்பெனியை எனது தகப்பனார் ராஜேந்திரன், மற்றும் எனது தாயார் சிவகாமி ஆகியோர் திறம்பட நடத்தி வந்தனர். தற்போது இந்த கம்பெனியை நான் நடத்தி வருகிறேன். இந்த கம்பெனியில் 60 பேர் திறமையான ஊழியர்கள் வேலை பார்த்து வருகின்றனர். எங்களது நிறுவனத்தின் தரமான ஸ்வீட், கார வகைகள் தமிழ்நாடு மட்டுமின்றி மற்றும் சிங்கப்பூர், மலேசியா, ஆஸ்திரேலியா, துபாய் போன்ற வெளிநாடுகளில் விற்பனையாகி வருகிறது.
என கூறினார்.
