Tuesday , November 28 2023
Breaking News
MyHoster

இந்த அறிகுறிகள் இருக்கா? அப்போ உங்க கண்பார்வை மங்கலாகப் போகுதுனு அர்த்தம்…

 

தேசிய கண் தானம் முகாம் ஒவ்வொரு ஆண்டும் ஆகஸ்ட் 25 ஆம் தேதி லிருந்து செப்டம்பர் 8 ஆம் தேதி வரை கண் தானம் குறித்த விழிப்புணர்வை நடத்துகிறது. இந்த 12 நாட்களும் அவர்கள் கண்தானம் பற்றிய விழிப்புணர்வை மக்களிடையே ஏற்படுத்தி வருகிறார்கள். இந்தியாவில் கிட்டத்தட்ட 5 ல் 1 வருக்கு கண் பார்வை இழப்பு இருப்பதாக அதிர்ச்சி ரிப்போர்ட் கூறுகிறது. கிட்டத்தட்ட 46 லட்சம் இந்தியர்கள் கண்பார்வை இழப்பை பெற்றவர்களாக இருக்கிறார்கள்.

எனவே மக்களுக்கு விழிப்புணர்வையும் எச்சரிக்கையும் ஊட்டும் வகையில் இந்த முகாம் செயல்பட்டு வருகிறது. எந்த மாதிரியான காரணங்கள் கண்பார்வை இழப்பை ஏற்படுத்துகின்றன. நமது கண் பார்வை ஆரோக்கியத்தை எப்படி பாதுகாக்க வேண்டும் என்பது குறித்த விவரங்களை அவர்கள் கூறியுள்ளனர்.

நிரந்தர கண் பார்வை இழப்பு

நிரந்தர பார்வை இழப்பை கண்ணாடியாலோ, கான்டாக்ட் லென்ஸ்களாலோ சரி செய்ய இயலாது. கண்பார்வை இழப்பு என்பது சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரையும் பாதிக்க கூடிய ஒன்று. இதில் கண்புரை, மெகுலர் டிஜெனரேசன் போன்றவை வயதை பொருத்து வருகின்றனர். வயதானவர்கள் இதனால் பெரிதும் பாதிப்படைகின்றனர்.

 

கண் பார்வை குறைபாடு

உங்களுக்கு மங்கலான பார்வை தெரிந்தால் முதலில் உங்கள் கண் பார்வையில் குறைபாடு இருப்பதை புரிந்து கொள்ளுங்கள். அதற்கான சிகிச்சைகளை உடனே செய்வதன் மூலம் நீங்கள் கண்பார்வை இழப்பு முற்றிலுமாக போவதை தடுக்கலாம். ஒரு ஆரோக்கியமான கண் பார்வை உடையவர் 200 அடி தூரத்தில் இருக்கும் பொருளைக் கூட பார்க்க முடியும். ஒரு கண்பார்வை அற்ற நபரால் 20 அடி தூரத்தில் இருக்கும் பொருளைக் கூட காண இயலாது.

கண் பார்வை இழப்பு அதிகரிப்பு
கண் பார்வை இழப்பு வகைகள்
பார்வை குறைபாட்டின் நிலையை பொருத்து இது வகைப்படுத்தப்படுகிறது.

ஒட்டுமொத்த இழப்பு

முழுமையான கண்பார்வை இழப்பு ஏற்படுதல்.

ஒரு நபரின் கண் பார்வை திறன் 20/200 விகிதத்தில் இருந்தாலே அவர் ஒட்டுமொத்த கண்பார்வையும் இழந்து விட்டார். குறிப்பாக 60 வயதை கடந்த பெரியவர்களுக்கு இந்த மாதிரியான கண் பார்வை இழப்பு ஏற்படுகிறது.

நிறக்குருடு

இதை டிஸ்க்ரோமடோப்சியா என்று அழைக்கின்றனர். இந்த கண் பார்வை இழப்பில் பச்சை, சிவப்பு பிற நிறங்கள் தெரியாமல் போய் விடும். இதனால் இவர்களால் நிறங்களை பிரித்தறிய தெரியாது. இதில் சில பேருக்கு பிறவிலயே குறைபாடு நேரலாம்.

இரவுக் கண் பார்வை இழப்பு

இந்த மாதிரியான கண் பார்வை இழப்பு இரவு நேரங்களில் வெளிச்சம் குறைந்த நேரங்களில் மட்டும் ஏற்படும். இதில் முழுமையாக பார்வை போகாது ஆனால் பார்வையை பாதிக்கிறது.

ஏற்படக் காரணங்கள்
——————————–
கண்புரை

வயதான காலத்தில் ஏற்படும் கண்புரையால் இந்த இழப்பு ஏற்படுகிறது.

மெகுலர் டிஜெனரேசன்

 

இந்த கண் பார்வை இழப்பு பொதுவாக 60 மற்றும் 60 வயதை கடந்தவர்களுக்கு ஏற்படுகிறது. இது கண்ணின் மையப்பகுதியை பாதித்து பார்வை இழப்பை உண்டாக்குகிறது இதனால் பாதிக்கப்பட்டவர்கள் சரியாக படிக்க, எழுத மற்றும் வாகன ஓட்ட முடியாமல் அவதிப்படுவர்.

குளுக்கோமா

இந்த நோய் கண்ணின் முக்கியமான நரம்புகளை பாதித்து கண் பார்வை இழப்பை ஏற்படுத்துகிறது. கண்களில் ஏற்படும் அதிக இரத்தம் அழுத்தம் காரணமாக நரம்புகள் சேதமடைகின்றன.

டயாபெட்டிக் ரெட்டினோபதி

கண்ணில் உள்ள ரெட்டினா பகுதி பாதிப்படைவதால் ஏற்படுகிறது. 18 வயதுக்கு மேற்பட்டவர்கள், நீரிழிவு நோயாளிகள் இந்த பாதிப்பை அடைகின்றனர்.

ரூபெல்லா

இந்த நோய் தாயிடமிருந்து வயிற்றில் உள்ள குழந்தைக்கு பரவக் கூடும். இந்த மாதிரியான ஜெர்மன் அம்மை நோயால் கண்பார்வை இழப்பு உண்டாகலாம். இதற்கு சரியான தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொண்டாலே போதும். குழந்தையை பாதிக்காத வண்ணம் காத்து விடலாம்.

ஆப்தலமியா நியோனடோரம்

பிறந்த குழந்தைக்கு கண்ணில் ஏற்படும் அழற்சியால் இந்த நோய் உண்டாகிறது. தாயின் பிறப்புறுப்பு வழியாக குழந்தை பிறக்கும் போது இந்த வைரஸ் குழந்தையின் கண்களில் அழற்சியை உண்டாக்கலாம்.

ஆப்டிக் நரம்பு ஹைப்போபிளாசியா

இந்த நோய் பாதிப்பில் கண் நரம்புகளுக்கு போதுமான இரத்த ஓட்டம் இல்லாமல் பார்வை இழப்பு ஏற்படுகிறது. இது பெரும்பாலும் மரபுரிமை சார்நது வருகிறது.

பார்வை நரம்புச் சிதைவு

கண்ணில் உள்ள நரம்பு இழைகளில் எதாவது குறைபாடு இருந்தாலோ அல்லது கண்ணில் பாதிப்பு இருந்தாலோ பார்வை இழப்பு ஏற்படுகிறது.

மையோபியா

இந்த நிலையால் பாதிக்கப்பட்டவருக்கு நெருங்கிய பொருட்கள் தெளிவாகவும் தொலைவில் உள்ள பொருட்கள் மங்கலாகவும் தெரியும். இதற்கு குவி, குழி போன்ற லென்ஸ் உள்ள கண்ணாடிகளை அணிவதன் மூலம் பார்வை குறைபாட்டை சரி செய்யலாம்.

கண்ணில் ஏற்படும் காயங்கள்

கண்ணில் ஏற்படும் காயங்கள் மற்றும் விபத்துக்களால் பாதுகாப்பு சுரப்பிகள் தேய்ந்து போக வாய்ப்புள்ளது. இதனால் பார்வை இழப்பு ஏற்படும்.

விழித்திரை பிளவுகள்

வயதான அல்லது மரபியல் ரீதியான காரணங்களால் விழித்திரையில் பிளவு ஏற்படலாம். இதனால் பார்வை இழப்பு ஏற்படும். விழித்திரை சிதைவும் பார்வை இழப்பை உண்டாக்குகிறது.
செய்தி: சிவா

Bala Trust

About Admin

Check Also

Get out of all your problems with a simple Positive Step!

Just WhatsApp to +91 9789497176 K.Mathan and Get out of all your problems with a …

இரத்தம் வேண்டுமா?
NKBB TECHNOLOGIES