Sunday , December 3 2023
Breaking News
Home / Politics / மணிப்பூர் பிரச்சனைக்கு தீர்வு காண பாஜக அரசு முன்வரவில்லை. காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி வீடியோ வெளியீடு!!
MyHoster

மணிப்பூர் பிரச்சனைக்கு தீர்வு காண பாஜக அரசு முன்வரவில்லை. காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி வீடியோ வெளியீடு!!

மணிப்பூர் பிரச்சனைக்கு தீர்வு காண பாஜக அரசு முன்வரவில்லை. காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி வீடியோ வெளியீடு!!

டெல்லி : இந்தியா முழுவதும் ஒற்றைத் தன்மையை நிலைநிறுத்த பாஜக முயற்சிப்பதாக காங்கிரஸ் முன்னாள் தலைவர் சோனியா காந்தி குற்றம் சாட்டியுள்ளார்.

மிசோரம் மாநில சட்டமன்ற தேர்தல் வரும் 7ம் தேதி நடைபெற உள்ள நிலையில், காங்கிரஸ் வேட்பாளர்களுக்கு வாக்களிக்கக் கோரி வீடியோ ஒன்றை சோனியா காந்தி வெளியிட்டுள்ளார். அதில் மிசோரம் மாநிலத்திற்கும் தனக்குமான தொடர்பை விளக்கி உள்ள சோனியா காந்தி, வடகிழக்கு மாநிலங்களில் அமைதி நிலவ காங்கிரசிற்கு வாக்களிக்க வேண்டும் என்றும் கூறியுள்ளார். பழங்குடி மக்களுக்கு உள்ள உரிமைகளை பறிக்கும் வகையிலான சட்டங்கள் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்படுவதாகவும் மிசோரம் மாநில எம்பியை கூட ஒன்றிய, பாஜக அரசு அனுமதிப்பது இல்லை என்றும் அவர் குற்றம் சாட்டியுள்ளார்.

நாட்டின் பன்முகத் தன்மையை மதிக்காமல், ஒற்றை தன்மையை நிலைநிறுத்த பாஜக முயற்சிப்பதாகவும் சோனியா காந்தி சாடி உள்ளார். மணிப்பூர் 6 மாதங்களாக பற்றி எரியும் நிலையில், தீர்வு காண்பதற்கான எந்த முயற்சிகளையும் ஒன்றிய அரசு மேற்கொள்ளவில்லை என்றும் சோனியா காந்தி குற்றம் சாட்டியுள்ளார். மணிப்பூர் விவகாரத்தில் பிரதமர் மோடி மிக மோசமான அமைதி காப்பதாகவும் மணிப்பூர் செல்லக் கூட அவர் தயாராக இல்லை என்றும் அவர் தெரிவித்துள்ளார். மிசோரம் மாநிலத்தை ஆளும் மிசோ தேசிய முன்னணியும் ஜோரம் மக்கள் இயக்கமும் பாஜகவின் பினாமிகள் போல செயல்படுவதாகவும் அக்கட்சிகளுக்கு வாக்களித்து, பரிசோதித்து பார்ப்பதற்கான நேரம் இதுவல்ல என்றும் சோனியா காந்தி தெரிவித்துள்ளார்.

Bala Trust

About Admin

Check Also

மதுரையில் வள்ளல் பாண்டித்துரை தேவரின் சிலைக்கு முக்குலத்தோர் எழுச்சி கழகம் சார்பாக மாலை அணிவித்து மரியாதை

மதுரையில் தமிழ்ச்சங்கம் நிறுவிய வள்ளல் பொன்.பாண்டித்துரை தேவரின் 112 வது நினைவு தினத்தை முன்னிட்டு, மதுரையில் உள்ள அவரது திருவுருவச் …

இரத்தம் வேண்டுமா?
NKBB TECHNOLOGIES