Sunday , December 3 2023
Breaking News
Home / Politics / “பிரதமர் மோடியின் ஆன்மா அதானி வசம் இருக்கிறது” – ராகுல் காந்தி விமர்சனம்
MyHoster

“பிரதமர் மோடியின் ஆன்மா அதானி வசம் இருக்கிறது” – ராகுல் காந்தி விமர்சனம்

டெல்லி : காங்கிரஸ் மூத்த தலைவரும் வயநாடு தொகுதி எம்பியுமான ராகுல் காந்தி டெல்லியில் உள்ள காங்கிரஸ் கட்சியின் தலைமை அலுவலகத்தில் செய்தியாளர்களை நேற்று சந்தித்தார்.

அப்போது பேசிய அவர், “பிரதமர் மோடியின் ஆன்மா அதானியின் வசம் இருக்கிறது. எனவே நாங்கள் என்னதான் தாக்கினாலும் அது அவரை ஒருபோதும் பாதிக்காது. அதானி, மோடி, ராகுல்

பிரதமர் மோடியை பணியமர்த்தியது அதானிதான். எனவே அவருக்காகதான் பிரதமர் பணியாற்றிக் கொண்டிருக்கிறார். அதானியை நாங்கள் தாக்க தொடங்கியுள்ளதால் எதிர்க்கட்சிகள் மீது உளவு அமைப்புகள் ஈடுபடுத்தப்படுகிறது.

கௌதம் அதானிக்கு எதிராக பேசிய அனைத்து தலைவர்களுக்கும் ஐஃபோன் நிறுவனத்திடம் இருந்து எச்சரிக்கை செய்தி வந்திருக்கிறது. ஒரு சிலர் மட்டுமே இத்தகைய செயல்களை எதிர்த்து போராடிக் கொண்டிருக்கின்றனர். எங்களை உளவு பார்ப்பது பற்றி ஒருபோதும் நாங்கள் அச்சப்பட போவதில்லை. என்னுடைய அலைபேசியை வேண்டுமானாலும் தருகிறேன்” எனக் கூறினார்.

Bala Trust

About Admin

Check Also

கன்னியாகுமரியில் திமுக இளைஞரணி மாநில மாநாட்டையொட்டி, இருசக்கர வாகன பேரணியை தொடங்கி வைத்தார் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்

கன்னியாகுமரி: கன்னியாகுமரியில் திமுக இளைஞரணி மாநில மாநாட்டையொட்டி, இருசக்கர வாகன பேரணியை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தொடங்கி வைத்தார். கன்னியாகுமரியில் …

இரத்தம் வேண்டுமா?
NKBB TECHNOLOGIES