Saturday , September 23 2023
Breaking News
Home / இந்தியா / தமிழ்நாடு இளைஞர் கட்சி அளித்த மனுவிற்காக சட்டமன்றத்தில் MLA மாணிக்கம் வாயிலாக பேசிய முதலமைச்சர், துணை முதலமைச்சருக்கு நன்றி
MyHoster

தமிழ்நாடு இளைஞர் கட்சி அளித்த மனுவிற்காக சட்டமன்றத்தில் MLA மாணிக்கம் வாயிலாக பேசிய முதலமைச்சர், துணை முதலமைச்சருக்கு நன்றி

தமிழ்நாடு இளைஞர் கட்சி அளித்த மனுவிற்காக சட்டமன்றத்தில் MLA மாணிக்கம் வாயிலாக பேசிய முதலமைச்சர், துணை முதலமைச்சருக்கு நன்றி…#jalliakttu#protest#cases

மாண்புமிகு தமிழக முதல்வர் திரு எடப்பாடி பழனிச்சாமி துணை முதல்வர் திரு. ஒ.பன்னீர் செல்வம்அவர்களுக்கு,பொருள் 2017 ஆம் ஆண்டு நடைபெற்ற ஜல்லிக்கட்டு போராட்டத்தில் அப்பாவி பொதுமக்கள் மீது போடப்பட்ட கிரிமினல் வழக்குகளை திரும்பப் பெறவேண்டிமதிப்பிற்குரிய ஐயா இந்த மனு மூலம் தங்களிடம் வேண்டிக் கொள்வது யாதெனில், தமிழ்நாட்டில் பண்டைய காலம் தொட்டு நடைபெற்றுவந்த தமிழனின் வீர விளையாட்டான ஜல்லிக்கட்டை ஒருசில முதலாளித்துவம் மிக்க அதிகார வர்க்கத்திற்கு உட்பட்டவர்கள் பீட்டா அமைப்பின் மூலம் காளைகள் துன்புறுத்தப்படுவதாக உயிர் பலிகள் ஏற்படுவதாகவும் கூறி 2012 ஆம் ஆண்டு முதல் நான்கு ஆண்டுகளுக்கும் மேலாக இந்த வீர விளையாட்டை நடைபெற விடாமல் தடை செய்து வைத்திருந்தனர். இதனால், இவர்கள் மறைமுகமாக கார்ப்பரேட் வர்த்தகத்தை பெருக்க நினைத்து நம்முடைய நாட்டு இன மாடுகளை அழிக்க நினைத்தனர். இந்தச் சூழ்நிலையில் தமிழர்களின் கலாச்சார விளையாட்டை விளையாடுவது குறித்தும் நம் நாட்டு இன மாடுகளின் பாதுகாப்பை உறுதி செய்வது குறித்தும் ஏற்பட்ட ஒரு அமைதிப் புரட்சியே இந்த ஜல்லிக்கட்டு போராட்டம். இந்தப் போராட்டமானது மிகவும் அமைதியான முறையிலும் ஒழுக்கமான முறையிலும் எந்தவித அரசியல் கட்சி தலையீடும் இல்லாமல் இளைஞர்களின் எழுச்சியால் முழுக்க முழுக்க தமிழகம் முழுவதும் மட்டுமின்றி உலகம் முழுவதும் சுய ஒழுக்கத்துடன் நடைபெற்று அந்தப் போராட்டம் வெற்றியும் பெற்றது அவ்வாறு வெற்றி பெற்ற அந்தப் போராட்டத்தில் சில பல வன்முறைகள் வேண்டுமென்றே தூண்டிவிடப்பட்ட அதில் அப்பாவி மக்களும் பாதிக்கப்பட்டதோடு அதில் ஒழுக்கத்துடனும் கண்ணியத்துடன் நடந்து கொண்ட மக்கள் மீதும் கிரிமினல் வழக்குகள் பதியப்பட்டு இன்றளவும் விசாரணை நடைபெற்று வருகிறது. இந்த வழக்கானது இன்றளவும் அவர்களின் வாழ்வாதாரத்தையும் மன உளைச்சலையும் அதிகரித்த வண்ணமே உள்ளது. எனவே, இந்த வழக்கு சம்பந்தப்பட்ட அனைத்து கோப்புகளையும் எந்த ஒரு நிபந்தனையும் விசாரணையுமின்றி திரும்பப் பெறுமாறு தமிழ்நாடு இளைஞர் கட்சியின் சார்பாக சிரம் தாழ்ந்து கேட்டுக்கொள்கின்றோம்.குறிப்பு: இதே மனுவை துணை முதல்வர் திரு. ஒ.பன்னீர் செல்வம் அவர்களை நேற்று (03/02/2021) சந்தித்து கோரிக்கை மனு கொடுத்துள்ளோம் என்று தமிழ்நாடு இளைஞர் கட்சி யினர் தெரிவித்தனர்

Bala Trust

About Admin

Check Also

மயிலாடுதுறையில் மாவட்ட ஆட்சியர் புகைப்பட கண்காட்சியை தொடங்கி வைத்தார்

மயிலாடுதுறையில்மாவட்ட ஆட்சியர் புகைப்பட கண்காட்சியை தொடங்கி வைத்தார் மயிலாடுதுறையில் இந்திய அரசு தகவல் மற்றும் ஒலிபரப்பு அமைச்சகம், மத்திய மக்கள் …

இரத்தம் வேண்டுமா?
NKBB TECHNOLOGIES