Tuesday , November 28 2023
Breaking News
Home / செய்திகள் / உலக அயோடின் பற்றாக்குறை குறைபாடு தடுப்பு தினம்
MyHoster

உலக அயோடின் பற்றாக்குறை குறைபாடு தடுப்பு தினம்

உலக அயோடின் பற்றாக்குறை குறைபாடு தடுப்பு தினத்தை எலைட் சிறப்பு பள்ளி கடைப்பிடித்தது .

பள்ளி தாளாளர் முத்துலட்சுமி பள்ளி மாணவர்களிடையே பேசுகையில், உலக அயோடின் பற்றாக்குறை குறைபாடுகள் தடுப்பு தினம் ஒவ்வொரு ஆண்டும் அக்டோபர் 21 ஆம் நாள் அன்று அனுசரிக்கப்படுகிறது. அயோடின் சத்து பயன்பாடு குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துவது இந்நாளில் நோக்கமாகும். அயோடின் சத்து குறைபாட்டால் இளம் வயதினரின் அறிவுத் திறன் பாதிக்கப்படும். பெரியவர்களுக்கு நரம்புத் தளர்ச்சி ஏற்படும். எனவே தினமும் அயோடின் கலந்த உப்பினை பயன்படுத்த வேண்டும். உலக பொது சுகாதார நிறுவனம் நடத்திய ஆய்வின்படி அயோடின் சத்து குறைபாடு உள்ள நாடுகளில் இந்தியாவும் இடம்பெற்றுள்ளது. அயோடின் சத்து மனித வளர்ச்சிக்கு தேவையான மைக்ரோ ஊட்டச்சத்தாகும். நம் உடலில் கழுத்தின் முன்பகுதியில் தைராய்டு சுரப்பி உள்ளது. இந்த சுரப்பியானது இரத்தத்தில் உள்ள அயோடினையும் சில புரத பொருட்களையும் இணைத்துக்கொண்டு தைராக்ஸின் மற்றும் ட்ரை அயோடோ தைரோனின் எனும் ஹார்மோனையும் சுரக்கிறது. அயோடின் நுண் சத்தானது ரத்தத்தில் குறைந்தால் இரண்டு ஹார்மோன்களின் உற்பத்தி பாதிக்கப்படும் எனவே அயோடின் சத்து உள்ள உப்பினை பயன்படுத்த வேண்டும் என்றார். இயற்கை நல வாழ்வியல் ஆலோசகரும் யோகா ஆசிரியருமான விஜயகுமார் மற்றும் பள்ளி ஆசிரியர்கள் நிகழ்ச்சியில் பங்கேற்றார்கள்.

 

Bala Trust

About Admin

Check Also

தமுமுக மதுரை தெற்கு மாவட்டம் சார்பாக ஆம்புலன்ஸ் அர்ப்பணிப்பு.!

தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்ற கழகம் மதுரை தெற்கு மாவட்டம் சார்பாக அனைத்து சமுதாய மக்களுக்காக 202 வது ஆம்புலன்ஸ் அர்ப்பணிப்பு …

இரத்தம் வேண்டுமா?
NKBB TECHNOLOGIES