
மேலும் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட 100-க்கும் மேற்பட்ட பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.
இதுகுறித்து அறக்கட்டளையின் செயலாளர் ராதாகிருஷ்ணன் நம்மிடம் கூறுகையில் :-
மதுரையில் சங்கேஸ்வர அறக்கட்டளையின் மூலம் அனைத்து பிரதோஷ நாட்களிலும் அன்னதானம் மற்றும் ஏழை,எளிய மக்களுக்கு மருத்துவ சேவைகள், கல்வி உதவித்தொகை, அரிசி,மளிகை பொருட்கள் போன்ற பல்வேறு நலத்திட்ட உதவிகளை வழங்கி வருகிறோம்.
இந்த உதவிகள் அனைத்தும் யாரிடமும் எந்த நன்கொடையும் வாங்காமல் எங்களின் சொந்த பணத்தை கொண்டு அறக்கட்டளை மூலம் இந்த உதவிகளை வழங்கி வருகிறோம்.
கொரோனா ஊரடங்கின் போது பாதிக்கப்பட்ட ஏழை எளிய மக்களுக்கு பல்வேறு நலத்திட்ட உதவிகளை வழங்கிய நாங்கள் இந்த உதவிகளை தொடர்ந்து மூன்று ஆண்டுகளாக வழங்கி வருகிறோம்.
இந்நிகழ்வில் அறக்கட்டளையின் தலைவர் சீனிவாசன், செயலாளர் ராதாகிருஷ்ணன், பொருளாளர் வீரபாண்டி, டிரஸ்டி ரவிசங்கர், துணைச் செயலாளர் பாண்டியன் மற்றும் பக்தர்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
இளைஞர் குரல் செய்திகளுக்காக மதுரை மாவட்ட செய்தியாளர் கனகராஜ்