Friday , April 12 2024
Breaking News
Home / செய்திகள் / மதுரையில் தமிழக நாயுடு பேரவை சார்பாக உரிமை மீட்பு அடையாள உண்ணாவிரத போராட்டம்.!!
MyHoster

மதுரையில் தமிழக நாயுடு பேரவை சார்பாக உரிமை மீட்பு அடையாள உண்ணாவிரத போராட்டம்.!!

மதுரை பழங்காநத்தம் பகுதியில் தமிழக நாயுடு பேரவை சார்பாக உரிமை மீட்பு அடையாள உண்ணாவிரத போராட்டம் நடைபெற்றது. இதில் சுமார் 2000க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். இந்நிகழ்வில் தமிழக நாயுடு பேரவை மாநில தலைவர் குணசேகரன் நாயுடு எழுச்சி பேருரை ஆற்றினார்.

மேலும் தெலுங்கு இன மக்களை காப்பதற்காக “ஜனநாயக மக்கள் ராஜ்ஜியம்” என்ற புதிய கட்சியை தொடங்கியுள்ளதாக குணசேகரன் நாயுடு இந்நிகழ்வின் போது அறிவித்தார்.

மேலும் இந்த அடையாள உண்ணாவிரத போராட்டத்தில் கீழ்க்கண்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.
பேரரசி ராணி மங்கம்மாள் ஆட்சி புரிந்த காலத்தில் அவருடைய ஆட்சியில் வீர விளையாட்டு திடலாக இருந்த தமுக்கம் மைதானத்தில் தற்போது மதுரை மாநகராட்சியால் வணிக வளாகம் கட்டப்பட்டு வருகிறது. அவ்வாறு கட்டப்பட்டு வரும் வணிக வளாகத்திற்கு பேரரசி ராணிமங்கம்மாள் பெயரை சூட்ட வேண்டும்.

மதுரையை தலைநகராக கொண்டு பேரரசி ராணி மங்கம்மாள் ஆட்சி புரிந்து வந்த அவரது அரண்மனையை தற்போது தமிழக அரசு காந்தி அருங்காட்சியமாக மாற்றிவிட்டது. மாற்றப்பட்ட காந்தி அருங்காட்சியத்தின் நுழைவாயிலில் பேரரசி ராணி மங்கம்மாள் நினைவாக அவரது பெயரில் அலங்கார வளைவு அமைத்திட வேண்டும்.

மதுரை விமான நிலையத்திற்கு மாமன்னர் திருமலை நாயக்கர் பெயரையோ அல்லது ஆங்கிலேயரை எதிர்த்து வீரமுழக்கமிட்ட இந்திய நாட்டின் சுதந்திரத்திற்கு முதல் வித்திட்ட வீரபாண்டிய கட்டபொம்மன் பெயரையோ வைக்க வேண்டும்.

அரசு மக்கள் தொகை கணக்கெடுப்பில் நாயுடு நாயக்கர் இனத்தவரை உட்பிரிவுகள் வாரியாக இதுவரை தமிழக அரசு கணக்கெடுத்து வருவதை மாற்றி, உட்பிரிவு வாரியாக கணக்கெடுக்காமல் ஜாதியின் அடிப்படையில் எல்லா உட்பிரிவுகளையும் ஒன்றிணைத்து நாயுடு, நாயக்கர் என்ற பெயரிலேயே தமிழகத்தில் கணக்கெடுப்பு நடத்தப்பட வேண்டும். போன்ற தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.

இப்போராட்டத்தில் தமிழ்நாடு தெலுங்கு தமிழினம் மாநில தலைவர் வேங்கட்ட விஜயன், பொதுச்செயலாளர் அனந்தராமன், வீரபாண்டிய கட்டபொம்மன் பண்பாட்டு கழகம் மாநில தலைவரும், முன்னாள் சட்டமன்ற உறுப்பினருமான இரா.வரதராஜன், தமிழ்நாடு அனைத்து நாயுடுகள் சங்கங்களின் கூட்டமைப்பு மாநில தலைவர் எஸ்.எம் சில்க்ஸ் மனோகரன் நாயுடு, தமிழ்நாடு நாயுடு மகாஜன சங்க பொதுச் செயலாளர் சுருதி ரமேஷ், விஜயநகர புரட்சிப்படை நிறுவனத் தலைவர் வைகை பாண்டியன்,

தமிழக அனைத்து நாயுடுகள் நாயக்கர் மகாஜன பேரவை ஆர் கே ஜெயக்குமார், தமிழக கவரா நாயுடு சங்க மாநில பொதுச் செயலாளர் கிருஷ்ணராஜ், ஜியோ நேச்சுரல் ஸ்டோன்ஸ் சி.வி.மோகன், தமிழ்நாடு நாயுடு மகாஜன சங்க மாநில துணைத்தலைவர் போஸ்நாயுடு,
அகில இந்திய தெலுங்கு சம்மேளனம் மாநில இளைஞரணி செயலாளர் எவர்கிரீன் ஜிவி பாலமுருகன், நாயுடு நலச்சங்க நிறுவனத் தலைவர் மணப்பந்தல் பாஸ்கரன் அகில இந்திய தெலுங்கு சம்மேளனம் மதுரை மாவட்ட செயல் தலைவர் மன்னர் கல்லூரி ரங்கராஜ்,

தமிழக நாயுடு பேரவை மாநிலத் துணைத் தலைவர் அழகிரிசாமி, மாநில கொள்கை பரப்புச் செயலாளர் ஜெயபால், மாநில இளைஞரணி செயலாளர் தர்மலிங்கம், திருச்சி மண்டல தலைவர் பெரியசாமி, மாநிலத் துணைத் தலைவர் மதுரை வி கே ஆர் சேகர், மாநில மகளிர் அணி அமைப்பாளர் நிர்மலா மாதாஜி, மாநில பொருளாளர் ஜெயராஜ், மாநிலச் செயலாளர் ராஜசேகரன், மாநில தகவல் தொழில்நுட்ப பிரிவு துணைச் செயலாளர் ஜெய்சங்கர் மற்றும் பாரதிய ஜனதா கட்சி விளையாட்டு மற்றும் திறன் மேம்பாட்டு பிரிவு மாவட்ட தலைவர் வாலிபால் செந்தில்குமார் நாயுடு, மாவட்ட ஒருங்கிணைப்பாளர் ராதாகிருஷ்ணன், சிட்கோ சீனிவாசன் உள்பட தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களிலும் இருந்து நிர்வாகிகள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

நிகழ்ச்சியின் முடிவில் தமிழக நாயுடு பேரவை மாநில அமைப்பு செயலாளர் செல்லபாண்டியன் நன்றியுரை கூறினார்.

இளைஞர் குரல் செய்திகளுக்காக மதுரை செய்தியாளர் கனகராஜ்
Bala Trust

About Kanagaraj Madurai

Check Also

தமிழ்நாடு வியாபாரிகள் சங்க பேரவையின், வணிகர் தின பாதுகாப்பு மாநாட்டை முன்னிட்டு தொடர் ஜோதி ஓட்டம்

தமிழ்நாடு வியாபாரிகள் சங்க பேரவையின் 41-வது வணிகர் தின பாதுகாப்பு மாநாடு மே மாதம் 5-ஆம் தேதி நடைபெற உள்ளதை …

இரத்தம் வேண்டுமா?
NKBB TECHNOLOGIES