
மதுரை பெத்தானியாபுரம் மேட்டுத்தெருவில் ஆடிப்பெருக்கை முன்னிட்டு சிவசக்தி டிரஸ்ட் சார்பாக நடந்த மாபெரும் அன்னதானத்தை சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்ட பாஜக விவசாய அணி மாநில துணைத்தலைவரும், தமிழ்நாடு சிலம்பாட்டக் கழக அகில இந்திய பொதுச் செயலாளருமான வலசை முத்துராமன் ஜி அவர்கள் ஆன்மீக சொற்பொழிவு ஆற்றி மாபெரும் அன்னதானத்தை தொடங்கி வைத்தார்.

இந்நிகழ்ச்சிக்கு டிரஸ்ட் தலைவர் உதயசூரியன் தலைமை தாங்கினார். விளாங்குடி சபாராம் மருத்துவமனை டாக்டர் பாலசுப்பிரமணியன், டிரஸ்ட் அறங்காவலர்கள் பூமிராஜா, சோலை எஸ்.பரமன், முருகன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இந்நிகழ்வில் திருஞானசம்பந்தம், ராமநாதன் உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
மதுரை செய்தியாளர் கனகராஜ்