இணைய உலகத்தை கலக்கும் தற்போதைய கில்லாடி PUBG
தற்போது YOUTUBE -ல் உலக முழுவதும் சுற்றும் PUBG
#THE BOMB FIRE
Pubg என்றால் என்ன ??
PUBG என்ற பெயர் எப்படி ??
(PUBG) என்பது ஒரு ஆன்லைன் மல்டிபிளேயர் போர் ராயல் விளையாட்டு ஆகும், இது தென் கொரிய வீடியோ கேம் நிறுவனமான புளூஹோலின் துணை நிறுவனமான PUBG கார்ப்பரேஷனால் உருவாக்கப்பட்டது மற்றும் வெளியிடப்பட்டது. இந்த விளையாட்டு முந்தைய மோட்களை அடிப்படையாகக் கொண்டது, இது பிற விளையாட்டுகளுக்காக பிரெண்டன் “பிளேயர்அன்னன்” கிரீன் உருவாக்கியது, இது 2000 ஜப்பானிய திரைப்படமான பேட்டில் ராயலால் ஈர்க்கப்பட்டு, கிரீனின் படைப்பு இயக்கத்தின் கீழ் ஒரு முழுமையான விளையாட்டாக விரிவடைந்தது. விளையாட்டில், நூறு வீரர்கள் வரை ஒரு தீவுக்குள் பாராசூட் செய்து, தங்களைத் தாங்களே கொலை செய்வதைத் தவிர்த்து மற்றவர்களைக் கொல்ல ஆயுதங்கள் மற்றும் உபகரணங்களைத் தேடுகிறார்கள். விளையாட்டின் வரைபடத்தின் கிடைக்கக்கூடிய பாதுகாப்பான பகுதி காலப்போக்கில் அளவு குறைகிறது, எஞ்சியிருக்கும் வீரர்களை இறுக்கமான பகுதிகளுக்கு வழிநடத்துகிறது. கடைசி வீரர் அல்லது அணி நின்று சுற்றில் வெற்றி பெறுகிறது.
மைக்ரோசாப்ட் விண்டோஸுக்காக முதன்முதலில் போர்க்களங்கள் மார்ச் 2017 இல் ஸ்டீமின் ஆரம்ப அணுகல் பீட்டா நிரல் வழியாக டிசம்பர் 2017 இல் வெளியிடப்பட்டன. இந்த விளையாட்டு எக்ஸ்பாக்ஸ் ஒன்னிற்கான மைக்ரோசாப்ட் ஸ்டுடியோஸால் அதே மாதத்தில் அதன் எக்ஸ்பாக்ஸ் கேம் முன்னோட்டம் திட்டத்தின் மூலம் வெளியிடப்பட்டது, அதிகாரப்பூர்வமாக வெளியிடப்பட்டது செப்டம்பர் 2018 இல். பிளேஸ்டேஷன் 4 க்கான துறைமுகத்தைத் தவிர, அண்ட்ராய்டு மற்றும் iOS க்கான இலவசமாக விளையாடக்கூடிய மொபைல் பதிப்பு 2018 இல் வெளியிடப்பட்டது. போர்க்களங்கள் எல்லா நேரத்திலும் அதிகம் விற்பனையாகும் மற்றும் அதிகம் விளையாடும் வீடியோ கேம்களில் ஒன்றாகும், விற்பனை ஜூன் 2018 க்குள் உலகளவில் ஐம்பது மில்லியனுக்கும் அதிகமான பிரதிகள், மொபைல் பதிப்பைச் சேர்க்கும்போது மொத்தம் 400 மில்லியனுக்கும் அதிகமான வீரர்கள் உள்ளனர்.
போர்க்களங்கள் விமர்சகர்களிடமிருந்து நேர்மறையான விமர்சனங்களைப் பெற்றன, விளையாட்டு சில தொழில்நுட்பக் குறைபாடுகளைக் கொண்டிருந்தாலும், இது புதிய வகை விளையாட்டுகளை வழங்கியது, அவை எந்தவொரு திறன் மட்டத்தினராலும் எளிதில் அணுகக்கூடியவை மற்றும் மிகவும் மறுபயன்பாட்டுக்குரியவை. போர் ராயல் வகையை பிரபலப்படுத்துவதற்கு இந்த விளையாட்டு காரணமாக இருந்தது, அதன் வெற்றியைத் தொடர்ந்து பல அதிகாரப்பூர்வமற்ற சீன குளோன்களும் தயாரிக்கப்பட்டுள்ளன. இந்த விளையாட்டு பல விளையாட்டு விருதுகளுக்கான பரிந்துரைகளையும் பெற்றது. PUBG கார்ப்பரேஷன் பல சிறிய போட்டிகளை நடத்தி, பார்வையாளர்களுக்கு விளையாட்டை ஒளிபரப்ப உதவுவதற்காக விளையாட்டு கருவிகளை அறிமுகப்படுத்தியுள்ளது, ஏனெனில் இது ஒரு பிரபலமான எஸ்போர்ட்டாக மாற வேண்டும் என்று அவர்கள் விரும்புகிறார்கள். இளம் வீரர்களுக்கு தீங்கு விளைவிக்கும் மற்றும் அடிமையாக இருப்பதாகக் கூறி சில நாடுகளில் இந்த விளையாட்டு தடைசெய்யப்பட்டுள்ளது
இந்தியாவிலும் தாக்கத்தை ஏற்படுத்திய pubg உலக அளவில் அதிக பயன்ப்படுத்துவோரில் நம் நாடு தான் முதல் இடம் வகிக்கிறது போல
PUBG’ என்றால் என்ன? இந்திய நெட்டிசன்களை உற்சாகத்தில் ஆழ்த்திய கேள்வி!
தொழிலதிபர் ஆனந்த் மகிந்தாரவுடன் நெட்டிசன்கள் டிவிட்டரில் நடத்திய சுவாரஸ்யமான உரையாடல் மூலம் ‘பப்ஜி’ எனும் விளையாட்டு அதை அறியாதவர்கள் மத்தியிலும் பிரபலமாகி இருக்கிறது.
நீங்கள் ஆனந்த் மகிந்திரா போன்றவாரா? நான் நிச்சயம் ஆனந்த் மகிந்திரா ரகம் தான்! இல்லை தொழிலதிபர் என்ற முறையில் அவருடன் ஒப்பிட்டுக்கொள்ளவில்லை. அதில் அவர் வேறு லெவலில் இருக்கிறார். ஆனால் இணைய அப்பாவித்தனத்தில், தயக்கம் இல்லாமல் ஆனந்த் மகிர்ந்திராவுடன் நம்மை ஒப்பிட்டுக்கொள்ளலாம். அதாவது அவரைப்போலவே, உங்களுக்கும் ’பப்ஜி’ (PUBG) என்றால் என்ன என்று தெரியாமல் இருந்தால்!
இப்போது, ‘பப்ஜி’ என்றால் என்ன? எனும் கேள்வியை கேட்பவராக இருந்தால் நீங்களும் ஆனந்த மகிர்ந்திரா ரகம் தான். ஏனெனில் அண்மையில் அவர் டிவிட்டரில் இந்த கேள்வியை தான் வெள்ளந்தியாக கேட்டிருந்தார். அவரது கேள்விக்கு நெட்டிசன்கள் பலரும் மிகுந்த உற்சாகத்தோடு பதில் அளித்திருந்தனர். இந்த உரையாடல் மிக சுவாரஸ்யமாக அமைந்திருந்ததால், இது வரை பப்ஜியை அறியாதவர்கள் கூட அதை அறிந்து கொள்ளும் ஆர்வம் ஏற்பட்டது.
படம்; இந்தியா டைம்ஸ்
ஆனால் பப்ஜி உலகில் மூழ்கியிருக்கும் கோடிக்கணக்கான கேம் பிரியர்களுக்கு இந்த கேள்வியே வியப்பாக இருக்கலாம்.‘PUBG கேமை தெரியாதா? என அவர்கள் நம்ப முடியாத வியப்புடன் கேட்கலாம்.
ஆம் PUBG என்பது ஸ்மார்ட்போன் பயனாளிகள் மத்தியில் பிரபலமாக இருக்கும் கேம். அதற்கு கோடிக்கணக்கில் அபிமானிகள் இருக்கின்றனர். இந்தியாவிலும் கூட ஏகப்பட்ட ரசிகர்கள் உண்டு. அபிமானிகளிடம் கேட்டால், இந்த விளையாட்டு பற்றியும் அதன் நுணுக்கங்கள் பற்றியும் எண்ணற்ற விஷயங்களை உற்சாகமாக கூறுவார்கள். அதை பார்ப்பதற்கு முன், முன்னணி தொழிலதிபர் ஆனந்த மகிந்திராவுக்கும் இந்த கேமுக்கும் என்ன சம்பந்தம்? அவர் ஏன் பப்ஜி பற்றி கேட்க வேண்டும்? போன்ற கேள்விகள் எழலாம்.
ஆனந்த மகிந்திரா சாதனை தொழிலதிபர் மட்டும் அல்ல, டிவிட்டர் உள்ளிட்ட சமூக ஊடகங்களில் தீவிரமாக இருப்பவர் என்பதும் முக்கியமாது. அவர் டிவிட்டரை பயன்படுத்தும் விதமும் விசேசமானது. வெறும் மார்க்கெட்டிங் நோக்கில் அல்லது அலுப்பூட்டக்கூடிய வகையில் நிறுவன செய்திக்குறிப்பு பாணி தகவல்களை எல்லாம் அவர் டிவிட்டரில் பகிர்வதில்லை. நெட்டிசன்களோடு உண்மையான உரையாடலை மேற்கொள்ளும் வகையில் அவர் டிவிட்டரை பயன்படுத்துகிறார். அவ்வப்போது இணையத்தில் டிரெண்டாகும் விஷயங்கள் குறித்தும் அவர் தனது டிவிட்டர் பக்கத்தில் கருத்து தெரிவிப்பதுண்டு.
அதனால் தான், இணையவாசிகளுக்கு அதிலும் குறிப்பாக டிவிட்டர்வாசிகளுக்கு அவர் மீது ஒரு ஈர்ப்பு உண்டு. அந்த ஈர்ப்பு தான், அவர்களை மகிர்ந்திராவுடன் பப்ஜி விளையாட்டை இணைத்து பேச வைத்தது. இந்த பேச்சே, ஆனந்த மகிந்திராவை சங்கடத்துடன் பப்ஜி என்றால் என கேட்க வைத்தது.
நடந்தது இது தான். PUBG விளையாடப்படும் இணையச் சூழலில் மகிந்திரா நிறுவனத்தின் டிராக்டர் இருப்பதாக செய்தி வெளியானது. சமூக ஊடக உலகில் இது உண்மையில் பெரிய செய்தி தான். ஏனெனில் பப்ஜி உலக அளவில் பிரபலமாக இருக்கும் விளையாட்டு. வழக்கமான சுட்டுத்தள்ளும் விளையாட்டு தான் என்றால், இக்கால மொபைல் தலைமுறை மத்தியில் இந்த விளையாட்டு மீது அப்படி ஒரு மோகம் இருக்கிறது. அவர்கள் இந்த விளையாட்டில் ஆர்வம் காட்டுவதோடு இது பற்றி பேசுவதில் ஈடுபடுகின்றனர்.
அடிப்படையில் சுட்டுத்தள்ளும் விளையாட்டு என்றாலும், கேம் பிரியர்களுக்கு இது தனி உலகமாக அமைவதை அறிய முடிகிறது. இணையம் வாயிலாக, பலர் இணைந்து விளையாடக்கூடிய மல்டி பிளேயர் கேமாகவும் இது அமைகிறது. இந்த விளையாட்டில், கேம் ஆடுபவர்கள் பாராசூட்டில் குதித்து முன்னேற வேண்டும். அதன் பிறகு, ஆயுதங்களை தேடி சேகரித்து சுட்டுத்தள்ளிபடி முன்னேறி செல்ல வேண்டும். மொத்தம் நூறு பேராக துவங்கி ஒருவருக்கு ஒருவர் போட்டியிட்டு, இறுதியில் யார் ஒருவர் மட்டும் மிஞ்சுகிறார் என பார்ப்பது தான் விளையாட்டு.
இதில் தோட்டாக்கள் பாய்ந்து வரும், குண்டுகள் வீசப்படும் என்பதால் கேம் வீரர்கள் தாக்குதலில் இருந்து தப்பிக்க பல்வேறு பொருட்களுக்கு பின்னே மறைந்து கொண்டு தங்களை தற்காத்துக்கொள்ள வேண்டும். இந்த பொருட்கள் செட் பிரப்பார்டி என சொல்லப்படுகின்றன.
இந்த பொருட்களில் ஒன்றாக தான், மகிந்திரா நிறுவனத்தின் டிராக்டர் ஒன்று கேமில் தோன்றியிருக்கிறது. இதை டிவிட்ச் வீடியோகேம் நேரடி ஒளிபரப்பு தளத்தின் உறுப்பினரான சாக்கோடாக்கோ என்பவர் கண்டறிந்து இந்த தகவலை வெளியிட்டார்.
இந்த தகவல் இந்திய கேம் பிரியர்களை உற்சாகத்தில் ஆழ்த்தியது. சர்வதேச கேமில் ஒரு இந்திய பிராண்ட் வாகனமா என குதூகலம் அடைந்தவர்கள் தாங்களும் அதைப்பார்த்து உறுதி செய்து கொண்டனர். பலர் இந்த காட்சியை ஸ்கிரீன்ஷாட் எடுத்து டிவிட்டரில் பகிர்ந்து கொண்டனர். மறக்காமல் #PUBG , #mobileபோன்ற ஹாஷ்டேகையும் குறிப்பிட்டிருந்தனர்.
இந்த தகவலை தங்களுக்குள் பகிர்ந்து கொண்டால் போதாது என நினைத்த சிலர், டிவிட்டரில் ஆனந்த மகிந்திராவிடம் இந்த தகவலை ஆவலுடன் பகிர்ந்து கொண்டனர்.
இப்படி பலரும் பப்ஜி கேமில் மகிந்திரா டிராக்டரை பார்த்தது பற்றி உற்சாகம் கொண்ட நிலையில், ஆனந்த மகிந்திரா இவற்றுக்கு பதில் அளிக்கும் வகையில் ஒரு டிவீட்டை பகிர்ந்து கொண்டார். ஆனால், மிகவும் கெத்தாக,
படம்;டிவிட்டர்
கூடவே மறக்காமல், மகிந்திரா டிராக்டருக்கான அங்கீகாரம் குறித்தும் மகிழ்ச்சி தெரிவித்திருந்தார்.
இப்படி தான், ஆனந்த் மகிந்திரா மூலம், பப்ஜி பற்றி தெரியாதவர்களுக்கு கூட, பிளேயர் அன்நோன்ஸ் பேக்கிரவுண்ட் என்பதன் சுருக்கமான PUBG விளையாட்டு அறிமுகமாகி இருக்கிறது.
ஆனால், இதில் உள்ள சுவாரஸ்யத்தை தான் பார்க்க வேண்டுமேத்தவிர இதை பப்ஜி கேமிற்கான பரிந்துரையாக எடுத்துக்கொள்ளக்கூடாது. வேண்டுமானால், பப்ஜி கேமின் மோகம் பற்றிய விழிப்புணர்வாக எடுத்துக்கொள்ளலாம்..
விளையாட்டை தற்போதைய இளைஞர்கள் ஆபத்தை உணராமல் மனதளவில் உட்புகுந்து கொள்கிறார்கள் பெற்றோர்கள் அதில் மிகவும் கவனம் கொள்ளவேண்டும் பல விளையாட்டுகள் உலக நாடுகளில் ஏன் தடை செய்தார்கள் செய்து கொண்டும் இருக்கிறார்கள் என்பதை செய்திகளில் நீங்கள் அறிந்து இருக்கலாம் .அதுபோன்று தான் அளவுக்கு மீறினால் அமிர்தமும் நஞ்சு என்ற பழமொழி தற்போதைய காளகட்டதுக்கு பொருந்துகிறது…
விளையாட்டை விளையாட்டாக தான் பார்க்கவேண்டுமே தவிர அதை தன் வாழ்க்கையாக மாற்றிவிடக்கூடாது..
தொடரும்…..
வெள்ளி இதழ் செய்திகளுக்காக .
செய்தியாளர் ,
நா.யாசர் அரபாத் .