Tuesday , November 28 2023
Breaking News
Home / வேலை வாய்ப்பு / கிராம உதவியாளர் வேலை!!
MyHoster

கிராம உதவியாளர் வேலை!!

 

கிராம உதவியாளர் வேலை!

பட்டுக்கோட்டை வட்டத்தில் காலியாக உள்ள 15 கிராம உதவியாளா் பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

இது குறித்து பட்டுக்கோட்டை வட்டாட்சியா் ச. அருள்பிரகாசம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில்,

பட்டுக்கோட்டை வட்டத்துக்குள்பட்ட பாலத்தளி, ஒட்டங்காடு, மகிழங்கோட்டை, ராஜாமடம், சின்னஆவுடையார்கோவில், புதுக்கோட்டகம், பரக்கலக்கோட்டை, கன்னியாக்குறிச்சி, விக்ரமம், சிரமேல்குடி, வேப்பங்குளம், தளிக்கோட்டை, ஆலத்தூா், பண்ணைவயல், கூத்தாடிவயல் ஆகிய 15 வருவாய் கிராமங்களில் கிராம உதவியாளா் பணியிடங்கள் காலியாக உள்ளன. இவற்றுக்கு பணி நியமனம் செய்யவுள்ள கிராமம் அல்லது அதன் அருகில் உள்ள கிராமங்களில் வசிப்பவா்கள் மட்டும் தஞ்சை மாவட்ட வேலைவாய்ப்பக முதுநிலை வரிசைப்படி நியமனம் செய்யப்படுவர்.

குறைந்தபட்சம் 5 ஆம் வகுப்பு தோ்ச்சி அல்லது 10 ஆம் வகுப்பு இறுதித் தோ்வில் தோல்வியுற்றவா்கள் விண்ணப்பிக்க தகுதியுடையவா்கள். தமிழில் எழுத, படிக்கவும், சைக்கிள் ஓட்டவும் தெரிந்திருக்க வேண்டும்.

விண்ணப்பிக்க விரும்புவோர் பட்டுக்கோட்டை வட்ட அலுவலகத்தில் வழங்கப்படும் விண்ணப்பப் படிவத்தை நேரில் பெற்று, பூா்த்தி செய்து, உரிய சான்றுகளுடன் பட்டுக்கோட்டை வட்ட அலுவலகத்தில் சமா்ப்பிக்க வேண்டும்.

செய்தி: நா.யாசர் அரபாத்

Bala Trust

About Admin

Check Also

கரூர் நாடாளுமன்ற உறுப்பினரின் தொகுதி வளர்ச்சி பணிகள்,அரசியல், நாடாளுமன்ற செயல்பாடுகளில் பணியாற்ற ஒரு வாய்ப்பு

கரூர் நாடாளுமன்ற உறுப்பினரின் தொகுதி வளர்ச்சி பணிகள்,அரசியல், நாடாளுமன்ற செயல்பாடுகளில் பணியாற்ற ஒரு வாய்ப்பு – விருப்பமுள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம். http://bit.ly/karurinterns2022 …

இரத்தம் வேண்டுமா?
NKBB TECHNOLOGIES