Tuesday , November 28 2023
Breaking News
Home / இந்தியா / பாண்டியாவின் இடத்தை பிடிக்க இருக்கும் 3 வேகப்பந்துவீச்சு ஆல்ரவுண்டர்கள் இவர்கள் தான் – விவரம் இதோ
MyHoster

பாண்டியாவின் இடத்தை பிடிக்க இருக்கும் 3 வேகப்பந்துவீச்சு ஆல்ரவுண்டர்கள் இவர்கள் தான் – விவரம் இதோ

இந்திய அணியின் இளம் முன்னணி ஆல்ரவுண்டர் ஆன ஹார்டிக் பாண்டியா கடந்த செப்டம்பர் மாதம் துபாயில் நடைபெற்ற ஆசிய கோப்பை தொடரின் போது முதுகு பகுதியில் காயமடைந்தார். அதன் பிறகு சிகிச்சை மேற்கொண்டு மீண்டும் அணிக்கு திரும்பிய பாண்டியா அவ்வப்போது முதுகு வலியால் பாதிக்கப்பட்டார்.

எனவே அவர் தற்போது நடைபெற்று வரும் தென் ஆப்பிரிக்க அணிக்கு எதிரான தொடரில் இருந்தும் முதுகுவலி காரணமாக பாண்டியா விலகினார். இதனை அடுத்து முதுகு வலியின் தீர்வினை காண அவர் அறுவை சிகிச்சையை லண்டனில் வெற்றிகரமாக செய்துள்ளார். இதனால் அடுத்த 6 மாதங்கள் வரை பாண்டியாவால் கிரிக்கெட் போட்டிகளில் விளையாடமுடியாது.

ஆறு மாதங்கள் வரை இந்திய அணிக்காக அவர் விளையாட முடியாத காரணத்தால் தற்போது புதிய வேகப்பந்துவீச்சு ஆல்ரவுண்டர்களை இந்திய அணி தேர்வு செய்யப்பட்டுள்ளது. அதன்படி அதற்கான பட்டியலில் உள்ளவர்கள் விஜய் சங்கர் மற்றும் ஷிவம் துபே மற்றும் அண்டர் 19 வீரரான கமலேஷ் நாகர்கோட்டி ஆகியோர் இந்த போட்டியில் உள்ளனர்.

அவர்கள் அனைவரும் உள்ளூர் போட்டிகளில் மிகவும் சிறப்பாக விளையாடி வருவதால் ஆல்-ரவுண்டராக அவர்களே இந்தியனின் தேர்ந்தெடுக்க வாய்ப்பு இருக்கிறது என்று தகவல்கள் வெளியாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.

Bala Trust

About Admin

Check Also

இணைந்து எழு கரூர் கூட்டம்…

25/11/2023 இன்று கரூரில் நடைபெற்ற இணைந்து எழு கரூர் என்ற குழு கூட்டத்தில் எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலில் கரூர் நாடாளுமன்ற …

இரத்தம் வேண்டுமா?
NKBB TECHNOLOGIES