Friday , January 21 2022
Breaking News
Home / தமிழகம் (page 20)

தமிழகம்

மீண்டும் ஆட்சிக்கு வரமாட்டோம் ; ஸ்டாலின் குற்றச்சாட்டு!

வருடத்திற்கு 2 கோடி வேலைவாய்ப்புகளை உருவாக்குவதாக தவறான வாக்குறுதிகளைக் கூறி ஆட்சிக்கு வந்த, பாஜக அரசுக்கு அதிமுக அரசு அடிபணிந்து செயல்படுவதாகவும் ஸ்டாலின் விமர்சித்தார். மீண்டும் ஆட்சிக்கு வரமாட்டோம் என தெரிந்ததாலேயே முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி மற்றும் அவருடன் உள்ள அமைச்சர்கள், வரும் வரை லாபம் என அதிகளவில் ஊழல் செய்வதாக, திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் குற்றம்சாட்டியுள்ளார். திருவாரூர் மாவட்ட, நன்னிலம் தொகுதிக்கு உட்பட்ட பகுதிகளில் நடைபெற்ற, திமுக சார்பிலான …

Read More »

10 நாள்களுக்கு நிகழ்ச்சி நடத்த தடை!!

சென்னை கிண்டியில் உள்ள நட்சத்திர தனியார் ஓட்டலில் 85 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. பத்து நாட்களுக்கு நிகழ்ச்சி நடத்த தடை விதிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் மே, ஜூன், ஜூலை மாதங்களில் இருந்த கொரோனா பாதிப்பு தீவிரம் தற்போது குறைந்துள்ளது. தற்போது ஒரு நாளைக்கு 1000-க்கும் குறைவானர்களுக்கே கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்படுகிறது. இருப்பினும், பிரிட்டனில் பரவிவரும் உருமாறிய கொரோனா தமிழகத்தில் பரவாமல் இருப்பதற்காக தீவிர தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுவருகிறது. …

Read More »

ஓவைசியை கூட்டணிக்கு இழுக்கும் திமுக?

திமுக நடத்தும் மாநாட்டில் ஐதராபாத் எம்.பி அசாதுதின் ஓவைசி பங்கேற்க உள்ளார். பிகார் சட்டமன்றத் தேர்தலில் தனித்துப் போட்டியிட்டு 5 இடங்களில் வெற்றிபெற்றது ஓவைசியின் அகில இந்திய மஜ்லிஸ்-இ-இடிஹதுல் முஸ்லிம் கட்சி. மேலும் 19 தொகுதிகளில் வாக்குகளைப் பிரித்ததால் ஆர்ஜேடி-காங்கிரஸ் கூட்டணி ஆட்சியமைக்கும் வாய்ப்பை இழந்தது. பாஜகவுக்கு எதிரான வாக்குகளைப் பிரிப்பதால் பாஜக கூட்டணி வெற்றி பெற்றது. இந்நிலையில் ஓவைசி கட்சி தமிழகத் தேர்தலிலும் களம் காண உள்ளதாக செய்திகள் …

Read More »

கொரோனா தடுப்பூசி ரெடி; தமிழகத்தில் எங்கெல்லாம் ஒத்திகை?

தமிழகத்தில் கொரோனா தடுப்பூசி ஒத்திகை நடைபெறும் இடங்கள் குறித்து இங்கே விரிவாக காணலாம். இந்தியாவில் கொரோனா வைரஸ் பாதிப்பை தடுக்கும் வகையில் கோவாக்சின், கோவிஷீல்டு தடுப்பூசி பரிசோதனைகள் செய்யப்பட்டுள்ளன. இதனால் யாருக்கும் எந்தவித உடல்நலப் பாதிப்பும் ஏற்படவில்லை. இதையடுத்து பொதுமக்கள் பயன்பாட்டிற்கு மத்திய அரசு அனுமதி அளிக்கவுள்ளது. இந்த சூழலில் பல்வேறு மாநிலங்களில் கொரோனா வைரஸ் தடுப்பூசிக்கான ஒத்திகை இன்று (ஜனவரி 2) தொடங்கியுள்ளது. இதில் தடுப்பூசி விநியோகம், சேமித்து …

Read More »

தமிழகத்தில் பொது முடக்கம் நீட்டிப்பு !!

புதிய கொரோனா பரவி வரும் நிலையில், தமிழகத்தில் பொது ஊரடங்கு மேலும் ஒரு மாத காலத்துக்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. கொரோனா வைரஸ் நோய்த் தொற்றை தடுப்பதற்காக, மத்திய அரசின் வழிகாட்டுதலின்படி, தமிழ்நாட்டில் 25.3.2020 முதல் தேசிய பேரிடர் மேலாண்மைச் சட்டத்தின் கீழ், ஊரடங்கு உத்தரவு பல்வேறு தளர்வுகளுடன் அமலில் இருந்து வருகிறது. அந்த வகையில், தற்போது நடைமுறையில் உள்ள பொதுமுடக்கம் இன்றுடன் முடிவடைகிறது. அதற்கு அடுத்து எந்த மாதிரியான தளர்வுகள் அறிவிக்கப்படும் …

Read More »

ரஜினியை மீண்டும் எதிர்பார்க்கும் ப.சிதம்பரம்…

ரஜினிகாந்தின் அரசியல் முடிவு குறித்து ப.சிதம்பரம் கருத்து தெரிவித்துள்ளார். ரஜினிகாந்த் அரசியல் கட்சி தொடங்குவதாக அறிவித்த போது எப்படி தமிழக அரசியல் களம் சூடானாதோ அதே போல் அவர் முடிவை வாபஸ் பெற்றபோதும் பல்வேறு தரப்பிலுருந்தும் கருத்துகள் வந்துகொண்டிருக்கிறது தேர்தல் அரசியலில் ஈடுபடப்போவதில்லை என ரஜினிகாந்த் உறுதியாய் அறிவித்துள்ள நிலையில் தம்மால் முடிந்த நல்ல விஷயங்களை தொடர்ந்து செய்வேன் என்று தெரிவித்துள்ளார். ரஜினிகாந்தின் இந்த முடிவு குறித்து முன்னாள் மத்திய …

Read More »

சட்டமன்றத் தேர்தலில் ரஜினிகாந்திடம் ஆதரவு கேட்பேன்…

நடிகர் ரஜினியிடம் தான் நண்பர் என்ற முறையில் ஆதரவு கேட்பேன் என  மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார். தமிழக சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு பல்வேறு பகுதிகளில் தேர்தல் பரப்புரையை மேற்கொண்டு வரும் மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் இன்று புதுக்கோட்டையில் தேர்தல் பரப்புரையை மேற்கொண்டார். இதனிடையே செய்தியாளர்களை சந்தித்த அவர், “ரஜினியை சென்னை சென்ற பிறகு சந்திப்பேன். அவர் நலனை விசரிப்பேன். அவர்களின் நலனில் அக்கறை …

Read More »

தமிழக மக்களுக்கு அடுத்த ஹேப்பி நியூஸ் இதோ!

பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்கும் அறிவிப்பு தொடர்பாக தமிழக அரசு அடுத்தகட்ட நடவடிக்கையில் இறங்கியுள்ளது. தமிழகத்தில் அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள சட்டமன்ற தேர்தலை ஒட்டி, ஆளுங்கட்சியான அதிமுக பல்வேறு வியூகங்களை வகுத்து வருகிறது. இந்த சூழலில் பொங்கல் பரிசுத் தொகையை இரண்டரை மடங்கு அதிகரித்து அறிவிப்பு வெளியிட்டது பேசுபொருளாக மாறியது. இது தமிழக மக்களை பெரிதும் ஈர்த்துள்ளது என்றே சொல்லலாம். இருப்பினும் இதற்கான பலன்கள் கிடைக்குமா என்றால் அதனைப் பொறுத்திருந்து …

Read More »

படங்களை நீக்கக்கோரி திமுக மனு!

டோக்களில் மறைந்த முதல்வர் ஜெயலலிதா, முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம், அமைச்சர்களின் படங்கள் மற்றும் அதிமுக கட்சியின் சின்னம் இடம் பெற்றுள்ளது. பொங்கல் பரிசு தொகை 2500 ரூபாய்க்கான டோக்கனில் அதிமுக கட்சி சின்னம் மற்றும் தலைவர்களின் படங்களை நீக்கக்கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் திமுக மனு தாக்கல் செய்துள்ளது. பொங்கல் பரிசு தொகையாக அரிசி அட்டைத்தாரர்களுக்கு 2500 ரூபாய் வழங்கப்படும் என தமிழக அரசு …

Read More »

அடிதடி சண்டை; பொங்கல் பரிசு டோக்கன் விநியோகம் நிறுத்தம் !!

டோக்கன் பெறுவதில் ஏற்பட்ட தகராறைத் தொடர்ந்து அனைத்து நடைமுறைகளும் நிறுத்தப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் பொங்கல் பண்டிகை கொண்டாடப்படுவதை ஒட்டி, அரிசி ரேஷன் அட்டைதாரர்களுக்கு பரிசுத் தொகுப்பு வழங்கப்படும் என்று முதல்வர் பழனிசாமி அறிவித்துள்ளார். அதாவது ஒரு கிலோ பச்சரிசி, ஒரு கிலோ சர்க்கரை, 20 கிராம் உலர் திராட்சை, 20 கிராம் முந்திரி, 5 கிராம் ஏலக்காய், ஒரு முழுக் கரும்பு, துணிப்பை உடன் …

Read More »
இரத்தம் வேண்டுமா?
NKBB TECHNOLOGIES