Friday , January 21 2022
Breaking News
Home / குறுகிய செய்திகள்

குறுகிய செய்திகள்

குறுகிய செய்திகள்

மத்திய அமைச்சரவைக் கூட்டம்

பிரதமர் மோடி தலைமையிலான மத்திய பா.ஜ.க. கூட்டணி அரசு தொடர்ந்து 2-வது முறையாக ஆட்சி அதிகாரத்துக்கு வந்து இரண்டு ஆண்டுகள் நிறைவு அடைந்துள்ளது. ஆனால் இந்த 2 ஆண்டுகளில் ஒரு முறைகூட மத்திய மந்திரிசபையில் மாற்றமோ, விரிவாக்கமோ செய்யப்படவில்லை. இந்த நிலையில், மத்திய மந்திரிசபையில் மாற்றங்கள் செய்ய வசதியாக 12 மந்திரிகள் நேற்று ராஜினாமா செய்தனர். 12 மந்திரிகளின் ராஜினாமாக்களை பிரதமர் மோடியின் பரிந்துரை பேரில் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் …

Read More »

மேகேதாட்டு அணை விவகாரம்

மேகேதாட்டு அணை கட்டுவதற்கான எந்த ஒரு நடவடிக்கையையும் கர்நாடக அரசு எடுக்காத வகையில், சட்டப்பூர்வமான நடவடிக்கையை தமிழக அரசு எடுக்க வேண்டும் என, அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் வலியுறுத்தியுள்ளார். இது தொடர்பாக, ஓபிஎஸ் இன்று (ஜூலை 08) வெளியிட்ட அறிக்கை: “உச்ச நீதிமன்றத்துக்கு இணையான காவிரி நடுவர் மன்றத்தின் இறுதி ஆணையை முற்றிலும் அவமதிக்கும் வகையிலும், இது குறித்த வழக்கு உச்ச நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள நிலையிலும், தமிழக நீர்வளத்துறை …

Read More »

சீர்மரபினர் நல சங்க கரூர் மாவட்ட தலைவர், கரூர் மாவட்டஆட்சியாளர் அவர்களிடம் மனு…

115 சமூகங்களை பேச்சுவார்த்தை நடத்திய பிறகுதான் MBC இட ஒதுக்கீட்டில் மாற்றங்கள் செய்ய கோரி மனு கொடுக்கப்பட்டது.

Read More »

மாந்தரீகத்தை நம்பி ஏமாந்து நகையை பறி கொடுத்த சம்பவம் …

சென்னையில் மாந்தரீகம் செய்வதாக கூறி , கண் இமைக்கும் நேரத்தில் மயக்க மருந்து தெளித்து நகைகளை பறித்து சென்ற மர்ம ஆசாமி. சென்னை புளியந்தோப்பு நேரு நகர் 4 வது தெருவைச் சேர்ந்தவர் தௌலத் (46). இவர் வீட்டிலேயே டெய்லர் வேலை செய்து வருகிறார். இவரது கணவர் ஆட்டோ ஓட்டி வருகிறார். இவரது வீட்டு வாசலில் 50 வயதுமிக்க ஒருவர் இஸ்லாமிய முறைப்படி மாந்திரீகம் செய்த படி மேளம் அடித்து …

Read More »

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 43,071 பேருக்கு கொரோனா தொற்று உறுதி

இந்தியாவில் கொரோனா பாதிப்பு நிலவரம் குறித்து மத்திய சுகாதார அமைச்சகம் அறிக்கை வெளியிட்டுள்ளது. அதன்படி இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 43,071 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. மொத்த பாதிப்பு 3,05,45,433 ஆக உயர்ந்துள்ளது. நாடு முழுவதும் ஒரே நாளில் 955 பேர் கொரோனாவுக்கு பலியாகி உள்ளனர். இதன்மூலம் கொரோனா வைரசால் இதுவரை உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 4,02,005 ஆக உயர்ந்துள்ளது. கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்தவர்களின் …

Read More »

தமிழ்நாடு ஊரடங்கு கூடுதல் தளர்வுகள் என்னென்ன?

தமிழகத்தில் அமலில் இருக்கும் ஊரடங்கு ஜூலை 5-ம் தேதியுடன் முடிவடையவுள்ள நிலையில், நோய்த்தொற்று பாதிப்பு காரணமாக, பேருந்து போக்குவரத்து தடை விதிக்கப்பட்டுள்ள கோவை, நீலகிரி, சேலம், ஈரோடு, திருப்பூர், நாமக்கல், கரூர், தஞ்சை, நாகை, திருவாரூர், மயிலாடுதுறை ஆகிய 11 மாவட்டங்களில் மீண்டும் பேருந்து போக்குவரத்து தொடங்குவது, வழிபாட்டுத் தலங்களை திறப்பது, நோய் பாதிப்பு குறைவாக உள்ள மாவட்டங்களில் தேநீர் மற்றும் உணவகங்களில் வாடிக்கையாளர்கள் அமர்ந்து உணவருந்த அனுமதிப்பது, உள்ளிட்ட …

Read More »

கொரோனா தடுப்பூசி போட மக்களிடையே விழிப்புணர்வு

கிராம ஊராட்சிகளில், மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படவே, கொரோனா தடுப்பூசி போட வருவோரின் எண்ணிக்கை அதிகரிப்பதாக, சுகாதாரத்துறையினர் தெரிவித்துள்ளனர்.உடுமலை தாலுகா கிராமங்களில், மக்கள் பலரும், தடுப்பூசி போட்டுக் கொண்டால், ஏதேனும் பக்க விளைவுகள் ஏற்பட்டு விடுமோ என்று மனநிலையில் இருந்தனர். தற்போது, அந்த நிலை மாறியுள்ளது. பலரும், தடுப்பூசி போட்டு கொள்ள ஆர்வம் காட்டி வருகின்றனர்.சுகாதாரத்துறையினர் கூறியதாவது:மாவட்டத்தில், இதுவரை, 3 லட்சத்து, 94 ஆயிரத்து, 721 பேருக்கு முதல் டோஸ்; 61,809 …

Read More »

அறுந்து தொங்கும் மின்விளக்கு

கரூர் திருமநிலையூரில் இருந்து இராயனுர் செல்லும் வழியில் உள்ள மின்கம்பத்தில் மின்விளக்கு அறுந்து தொங்கிக் கொண்டு இருக்கிறது.கரூர் நகராட்சி விரைந்து சரிசெய்யும்மாறு இளைஞர்குரல் சார்பாக கேட்டுக் கொள்கிறோம்.

Read More »

பங்கு சந்தை சரிவு

நடப்பு வாரத்தின் நான்காவது வர்த்தக நாளான இன்று, பல்வேறு சர்வதேச காரணிகளுக்கு மத்தியில் இந்திய சந்தைகள் ஏற்ற இறக்கத்தில் காணப்படுகின்றன.   கடந்த சில வர்த்தக அமர்வுகளாகவே ஏற்ற இறக்கத்தினை கண்டு வரும் இந்திய சந்தைகள், இன்றும் பெரியளவில் மாற்றமின்றி காணப்படுகிறது. பல வலுவான சர்வதேச காரணிகளுக்கு மத்தியில், அதிகரித்து வரும் புதிய வகை கொரோனாவின் தாக்கம், இன்னும் எந்த மாதிரியான தாக்கத்தினை ஏற்படுத்துமோ என்ற அச்சத்தினை ஏற்படுத்தியுள்ளது. இதனால் …

Read More »

மீனவர்கள் மகிழ்ச்சி

  75 நாட்களுக்கு பின் ராமேஸ்வரம் மீனவர்கள் வலையில் அதிக இறால் மீன்கள் சிக்கியதால், மீனவர்களுக்கு ஜாக்பாட் அடித்தது.மீன்கள் இனப்பெருக்க தடை, ஊரடங்கினால் 75நாட்களுக்கு பின் ஜூன் 29ல் ராமேஸ்வரம், மண்டபத்தில் இருந்து ஏராளமான விசைப்படகில் அனுமதியின்றி மீனவர்கள் மீன்பிடிக்க சென்றனர்.இவர்கள் மீன் பிடித்து விட்டு நேற்று காலை கரை திரும்பினர். இதில் பெரும்பாலான படகுகளில் சராசரி 250 முதல் 300 கிலோ வரை இறால் மீன்கள் சிக்கியதால், மீனவர்கள் …

Read More »
இரத்தம் வேண்டுமா?
NKBB TECHNOLOGIES