Friday , January 21 2022
Breaking News
Home / கரூர் / தமிழ் கூறும் நல்லுலகில் திருக்குறளுக்கு கவிதையாக பொருளுரை எழுதிய இரண்டாமவர் என்ற பெருமைக்கு சொந்த காரர் – பாவலர் இறையரசன்
Vsolve UK

தமிழ் கூறும் நல்லுலகில் திருக்குறளுக்கு கவிதையாக பொருளுரை எழுதிய இரண்டாமவர் என்ற பெருமைக்கு சொந்த காரர் – பாவலர் இறையரசன்

ஆசை டிவியின் சிங்கப்பூர் அடையாளமாக இருக்கின்ற நண்பர் இறைமதி தமிழ்நாடு வந்திருந்தார்.

அவரை சின்ன தாராபுரத்தில் உள்ள அவரது இல்லத்தில் நானும் ஆசை டிவி கனகராஜும் சந்தித்தோம்.அவரது தந்தை பாவலர் இறையரசன் ஒரு மரபுக் கவிஞர். திருக்குறளுக்கு பொருளுரையை அந்த காலத்திலேயே படைத்தவர் அவர்.

தமிழ் கூறும் நல்லுலகில் திருக்குறளுக்கு கவிதையாக பொருளுரை எழுதிய இரண்டாமவர் என்ற பெருமை அவருக்கு உண்டு.”குறளும் பொருளும்’ என்ற அந்நூலை முத்தமிழ் அறிஞர் கலைஞர் வெளியிட பேராசிரியர் க.அன்பழகன் பெற்றுக்கொண்டார்.

அந்நூல் வெளியீட்டு விழாவில் கலைஞர் ஆற்றிய பாராட்டுரை முரசொலியில் முழு பக்க அளவு வந்திருக்கிறது.

பாவலர் இறையரசன், அவருடைய துணைவியார் அன்பு அம்மா, நண்பர் இறைமதி ஆகியோரைரைச் சந்தித்து உரையாடி உறவாடி உணவருந்தி மகிழ்வோடு திரும்பினோம்.

இது ஓர் இனிய நினைவு.

சிவராமன், நெறியாளர், ஆசை டிவி

Bala Trust

About Admin

Check Also

வட்டத்தில் தேசிய இளைஞர் தினத்தை முன்னிட்டு இரத்ததான முகாம்…

கரூர் மாவட்டத்தில் தேசிய இளைஞர் தினத்தை முன்னிட்டு கரூர் சேவாபாரதி தென்தமிழ்நாடு சார்பாகவும் ஸ்ரீ விஜயலட்சுமி வித்யா பண்பாட்டு பள்ளி …

இரத்தம் வேண்டுமா?
NKBB TECHNOLOGIES